Friday, November 20, 2009

தவறான ஒப்பீடுகள் ?

சச்சின் தேசியவாதி இல்லையாம்(அப்ப என்ன தீவிரவாதியா?),ஏன்னா அவர் மும்பை,குஜராத் கலவரம் போதும்,மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை சாவு நடந்த போதும் அறிக்கை ஒன்னும் கொடுக்கலையாம். ரொம்ப எளிதா இவிங்க இதில் சேர்க்காமல் விட்ட விஷயம், நண்டிக்ரம்,லால்கர்க்,சிங்கூர் இந்த இடங்களில் ஏழை மக்கள் ஒடுக்கப்பட்டு,கொல்ல பட்ட சம்பவத்தை,ஏன்னா இவிங்க கம்யூனிஸ்ட் போல இருக்கு,அந்த சம்பவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்..சார் இப்படி சச்சின் நாட்டில் நடக்குற ஒவ்வொரு விஷயத்துக்கும் அறிக்கை விட்டா அவர் அரசியல்ல இருக்காருன்னு அர்த்தம்,இப்போதைக்கு அவர் BCCIல சம்பளம் வாங்கிட்டு இருக்கார்,அவர் பொது வாழ்கையில் இல்லை.அவர் BCCI contract நிறைய விஷயங்களை தடுக்கலாம்,அறிக்கைகளையும் சேர்த்து.இப்ப குட அவர் சொன்ன அறிகையை கவனமா படிச்சு பாருங்க.


மத்திய அரசுக்கு தமிழ் மக்கள் மேல் சுத்தமா அக்கறை இல்லை அப்படின்னு இவர் சொல்றார், யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இவர் அதற்காக ஒப்பிட்ட நிகழ்ச்சியை பார்ப்போம், மலேசியாவில் தமிழர்கள் தாக்கபட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆஸ்திரேலியாவில் வட மாநிலவர்கள் தாக்கபடுவது போது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். நியாயமான ஒப்பிடா இது ? ..வேற ஒப்பிடே கிடைக்கலையா இவருக்கு. மலேசியாவில் போராட்டம் பண்ணவங்க எல்லாரும் மலேசியா குடிஉரிமை பெற்றவர்கள், போராட்டமே அங்கு சம உரிமை கேட்டு தான். இதையும் இந்திய குடிஉரிமை பெற்ற மாணவர்கள் அடித்த சம்பவத்தையும் எப்படி ஒப்பிடலாம், இப்பெல்லாம் வெளிநட்டு தமிழ் மக்களை அடித்தால், நெஞ்சம் பொறுக்குதில்லையே அப்படின்னு நாலு பதிவு எழுதிட்டு, டீ கடை பெஞ்சில் பத்து நிமிஷம் அதை பத்தி பேசிட்டு, நம்ம கடமை முடிஞ்சுதுடானு போயிட்டே இருக்காயங்க, சமீபத்தில் நடந்த பொது தேர்தல் இதற்கு ஒரு உதாரணம்.


மதங்கள் எதிரா விமர்சினம் பண்ணும் இவர், கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி என்ன சொல்றார், மத வல்லுனர்கள் யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை ரொம்ப எளிதா கண்டுபிடிச்சு எழுதிருக்கார், நோவா ஆறு நாளில் கப்பல் கட்டினார் ..சார் கருத்தை ஆழமா சொல்ல முயற்சி பண்ணுங்க தப்பு இல்லை, அதற்காக உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி 100-120 வருஷத்தை ஆறு நாலா மாற்ற குடாது. இதை விடுங்க இவர் அடுத்து கேட்ட கேள்வி...ஆப்ரிக்கா யானை, ஆசிய யானை இதில் எந்த யானை ஏறுச்சு ? டினோசார் ஏற்ற மாதிரி சொல்லவே இல்லையே ? பரபரப்பா கேள்வி கேட்டார். இந்த கேள்வி படிச்சா தூக்கி வாரி போட்டுது. ஏன்னா பொதுவா மத நம்பிக்கை இல்லாதவர்கள், அறிவியல் அதற்கு சொல்லும் காரணங்களை கேட்டு தான் விவாதிப்பார்கள். சார் இன்னும் ஆயிரம் வருடம் கழித்து அண்டார்டிகா யானை அப்படின்னு ஒன்னு தோன்றலாம், அதற்கு அறிவியலில் evolution அப்படின்னு சொல்றாங்க. அப்ப டினோசர் ? அணைத்து வாழும் உயிரினங்கள் ஒவ்வொரு ஜோடியும் ஏற்ற பட்டதுன்னு இவரே சொல்றார்..100-120 வருடம் கட்டிய கப்பலில் அந்த டினோசர் ஏற்ற இடம் இருந்திருக்கும், எதற்கு இந்த கேள்வி ? சரி பதில் திருப்தி இல்லையா. உங்க வழியிலே வரேன், ஒவ்வொரு உயிரினமும் ஒரு குடும்பத்தை சேர்ந்தது, டினோசார், பள்ளி குடும்பம். சிறுத்தை பூனை குடும்பம், ஓநாய் நாய் குடும்பம்..சோ உங்க கணக்கு படி ஆறு நாள்(பொய்)கட்டிய கப்பலில் சின்ன பள்ளி ஏறி, அப்புறம் ஆயிரம் வருடம் கழித்து டினோசார் உருவாகி இருக்கலாம்(இங்க காமெடி பண்ண முயற்சி பண்ணிருக்கேன்...மொக்கையாகவும் தோன்றலாம்).அவர் நம்பிக்கை ஏற்ற பதில் என்று நினைகிறேன்.

15 comments:

தாமிரபரணி said...

//***மலேசியாவில் தமிழர்கள் தாக்கபட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆஸ்திரேலியாவில் வட மாநிலவர்கள் தாக்கபடுவது போது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். நியாயமான ஒப்பிடா இது ***//
அங்குள்ள தமிழர்கள் பாதிக்கபடும்போது நம் தமிழர்கள் வேதனைபடுகிறார்கள் என்றால் காரணம் தமிழர்கள் என்கின்ற உணர்வு, அதைபற்றி இந்தி மற்றும் எனைய மக்களுக்கு வருத்தம் கிடையாது, இதில் இருந்து ஒன்று விளங்குகிறது இந்தியா என்னும் போலி உறவில் ஒப்புக்கு வாழந்துகொண்டிருகிறோம், என் நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் என்பதே என் வாதம் vice versa, வெளிவாழ் இந்தியர்களை விடுங்க இங்கு தமிழக மீனவர்கள் செத்து மடிகிறார்கள் அவர்களுக்கு ஆதரவாக இந்தியா ஒருதடவையாவது இலங்கையை எச்சரிச்சதுன்டா இல்லை, இதை நாம் அவர்களுக்கு சொல்லிதான் அந்த உணர்வு வரவேண்டுமானால் நாம் தனி தனியே வாழ்வது நாம் என்றால் தனி நாடாக இருந்தால் தமிழனின் மொழி, தமிழ்நாட்டு வளங்கள், தமிழனின் பாதுகாப்பு என ஆனைத்தும் நாமலே பார்த்துகொள்ளலாம் இந்தியாவை நாம் கையேந்த வேண்டாம்(மாறாக இந்தியா நம்க்கு ஆயுத உதவி கொடுத்து நம்மை காக்கதான் முயற்சிக்கும்)
நம் அரசியல்வாதிகளை மனதில் வைத்துகொண்டு பயம் கொள்ள வேண்டாம் நம்மால் கண்டிப்பாக தனித்து வெற்றியடைய முடியும்

Samuel | சாமுவேல் said...

தாமிரபரணி.

1. தமிழக மீனவர்கள் பிரச்சினை விஷயமாக அந்த பதிவர் பதிவில் நான் கருத்து ஒத்து போவதாக சொன்னேன், மறுபடியும் இங்கு சொல்றேன், உள்நாட்டில் நிறைய பிரச்சினைகள், தெற்கு முனையில் இருக்கும் நமக்கு உண்டு. அதில் நான் கருத்து மாறவில்லை.

2. சரி உலகத்தில் எந்த மூளையில் தமிழன் அடிச்சாலும், அவன் எந்த நாட்டு குடிமகனாக இருந்தாலும் நீங்க உணர்சிவசபடலாம், ஆனால் மத்திய அரசு உணர்ச்சிவசப்பட்ட முடியுமா ? சொல்லுங்க ? அப்படி இருந்தும், மத்திய அரசு மலேசியா விவகாரத்தில், மாநில அரசு பேச்சை கேட்டு ஏதோ பண்ணாங்கன்னு நினைகிறேன்.(சரியா நியாபகம் இல்லை )

3. முதலில் நீங்க இந்தியாவில் இருக்கும் தமிழரா? இந்தியாவில் இருக்கும் தமிழர்கள் தனி நாட்டில் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று நான் நினைக்கிறேன்.

பீர் | Peer said...

சாம், பின்னி பெடலெடுக்கறீங்க.. வாழ்த்துக்கள்.

உங்கள் பதிவோடு முழுவதும் ஒத்துப்போகிறேன். (சச்சின் தவிர, கிரிக்கெட்டில ஆர்வம் இல்லை என்பதால்)

kanagu said...

முதல் விஷயம் சரியா சொல்லி இருக்கீங்க சாமி... மற்ற விஷ்யங்கள் அந்த அளவுக்கு புரியல...

/*ஏன்னா அவர் மும்பை,குஜராத் கலவரம் போதும்,மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை சாவு நடந்த போதும் அறிக்கை ஒன்னும் கொடுக்கலையாம். */

அறிக்கை விட தான் ஆயிரம் அரசியல்வாதிகள் உள்ளார்களே!!! அப்புறம் அவர் வேறு எதுக்கு... அவரோட தொழில் கிரிகெட் விளையாடுறது.. அத அவர் நல்லா பண்றார்.. நாம இரசிக்கிறோம்... ரஹ்மான் நல்லா இசையமைக்கிறார்.. நாம இரசிக்கிறோம்... இவங்கயெல்லாம் நம்மள மாதிரி குடிமக்கள் தான் இந்த நாட்டுல.... அவங்கள போய் இதுக்கெல்லாம் போராட சொன்னா முதல்ல நாம என்ன பண்ணோம்-னு கேட்டுகணும்...

அதே மாதிரி... நம்ம மத்திய அரசு ஒரு சோப்ளாங்கி அரசா இருக்கு.. இங்க இருக்குற தமிழின தலைவர் கருணாநிதிக்கே தமிழன் மேல உணர்வு இல்ல.. இதுல மன்மோகன் சிங்-அ போய் என்னத்த கேக்குறது???

தருமி said...

பள்ளி = பல்லி

கொஞ்சம் மாத்திருங்க. இதைப் பதிவில் போட வேண்டாமே. கொஞ்சம் confusion.

//அதற்காக உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி 100-120 வருஷத்தை ஆறு நாலா மாற்ற குடாது. //

அதுக்கு 100 வருஷம் ஆச்சா?

Samuel | சாமுவேல் said...

நன்றி பீர்.. கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லையா ? பின்னுட்டங்களுக்கு நன்றி.

Samuel | சாமுவேல் said...

நன்றி கனகு...புரியாத மாதிரி எழுதிட்டேனா ? முக்கியமா இந்த பதிவு நம்ம பதிவர்கள் பன்னும் ஒப்பீடுகள் பத்தி,கருத்தை ஆழமா சொல்வதற்காக ஒப்பீடுகள் பன்னும் போது, நிறைய விஷயத்தை மறைத்தோ, தெரியாமலையோ எழுதி விடுகிறார்கள். அதற்காக எழுதப்பட்டது தான் இந்த பதிவு.

Samuel | சாமுவேல் said...

தருமி ஐயா..
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி, தொடர்ந்து இடுகைகளை படிக்கவும். எழுத்து பிழைகளுக்கு ப்ரோபசிரிடம் ஒரு மன்னிப்பு கேட்டு கொள்றேன்.

எனக்கு தெரிந்த வரை எங்கயும் இவ்வளவு நாட்கள் ஆச்சுனு சொல்லலை, சில கனக்கு பண்ணி சொல்றாங்க 100-120 வருடங்கள் ஆகிருக்கும் என்று....ஆனால் கண்டிப்பா ஆறு நாள் இல்லை.

மணிகண்டன் said...

ஹலோ, இது என்ன பதிவுல போடவேண்டிய கமெண்ட் எல்லாம் சேர்த்து ஒரு இடுகை எழுதறீங்க :)- இதை எல்லாம் ஒத்துக்கமுடியாது. ஒழுங்கா கிச்சடியாவது எழுதுங்க.

Samuel | சாமுவேல் said...

பிரபல பதிவர்கள் கம்மேண்டுகு பதில் சொல்ல மாட்டிகுறாங்க மணி, நம்மள சுத்தி எழுதின மொக்கை கம்மேன்ட்லாம் பதில் சொல்றைங்க, நம்ம பின்னுட்டம்க்கு பதில் சொல்ல மாட்டிகிரைங்க ...லிங்க் பாருங்க. :-)

மணிகண்டன் said...

சாம், பதில் சொல்லுவது எல்லாம் அவங்கவங்க நேரம் / விருப்பம் பொறுத்து தான் அமையும். நீங்களும் இன்னும் ஒரு வருடம் / ரெண்டு வருடம் கழிச்சி அதையே தான் செய்வீங்க :)- எனக்கு தெரிஞ்சி கோவிகண்ணன் ஓரளவு எல்லாத்துக்கும் பதில் சொல்ற டைப் தான். எப்போதும் திட்டறீங்கன்னு கடுப்பா இருக்காரோ என்னவோ !

தருமி said...

//சில கனக்கு பண்ணி சொல்றாங்க 100-120 வருடங்கள் ஆகிருக்கும் என்று.//

"உங்க புண்ணியத்தில" நேத்து விவிலியம் எடுத்துப் பார்த்தேன். 6 நாளும் இல்லை; 100 வருஷமும் இல்லை. இரண்டில் எதுவும் சரியில்லை; தப்புமில்லை. :)

பீர் | Peer said...

நேரமில்லாதவங்க மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்றாங்களேன்னு சாம் சொல்றாரு.

பதில் சொல்ல முடியாட்டி 'உன்னோட கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுடா' ன்னு சொல்லிட்டா.. அங்க போயி யார் கேள்வி கேட்க போறா?

உலகத்தின் எல்லாவற்றின் மேலும் ஒரு கருத்து/ முன்முடிவு வைத்துக்கொண்டு, தவறான ஒப்பீடுகள் தரும் போது.. திட்டாம கோயிலா கட்டுவாங்க? பொதுவில் எழுத வந்த பிறகு திட்டினாலும் தாங்கும் வைரமுடைய நெஞ்சு வேண்டும். அல்லாது, 'ஆஹா.. அருமை, சூப்பர், வாழ்த்துக்கள், நீங்கதான் க்ரேட்' போன்ற டெம்ப்ளேட்டுகள் மட்டுமே வேண்டுமெனில் பின்னூட்ட மட்டுறுதல் வைத்து வெளியிடலாம்.

மணிகண்டன் said...

இதுக்கு மேல நாட்டாமையா நான் இருக்கமுடியாது :)- அவரே தான் பதில் சொல்லணும் !

அன்புடன் மலிக்கா said...

சாம் பின்னுறீங்க ம்ம் தொடருங்க..

http://niroodai.blogspot.com/