Tuesday, October 27, 2009

தனக்கு மிஞ்சியது...

இந்தியாவில் இருக்கும் பணக்கார வர்கங்களையும், தொழிலதிபர்களையும் , மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்களையும் ஒப்பிட்டு பார்த்தால், இந்தியர்கள் தானம், நிதி உதவி,சமுதாய அக்கறை,சமுதாய முன்னேற்றம். இந்த மாதிரி சமாசாரங்களில் இன்னும் நிறைய பண்ணலாம் அப்படின்ற ஒரு பொதுவான எண்ணம் இருக்காம். சமீபத்தில் சுனில் மிட்டல் நேர்காணல் ஒன்றில் இதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் சொல்லும் காரணம்.

இந்தியர்கள் குடும்ப அமைப்பும்,கலாசாரமும் இதற்கு முக்கிய காரணம் என்று அவர் சொல்றாருங்க, அதாவது மேற்கத்திய நாடுகளில், பதினெட்டு வயசு ஆனவுடன் பையனயோ, மகளையோ வீட்ட விட்டே துரத்தி விடுவாங்களாம் (உண்மையாங்க ?). அதுக்கு மேல அவர்களை பத்திய ஒரு கவலை சுத்தமா இருக்காதாம். ஆனால் நம்முடைய நாட்டில் சாகும் வரை அப்பா அம்மா கூட தான் நிறைய பேர் இருக்க விரும்பறோம், நாலு, ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கிறோம்,அப்ப தான் கொஞ்சம் சந்தோசமா மூச்சை விட முடியுது.

"தனக்கு மிஞ்சியது தான் தானம்" அப்படின்னு சொல்றாங்க, இதில் தனக்கு என்பது, தான், தன்னுடைய மகன், பேரபிள்ளை, அம்மா,அப்பா...அப்படின்னு ஒரு பெரிய வட்டாரம் வந்திருதுங்க, இதனாலேயே. நமக்கு இந்த மாதிரி விஷயங்கள் அதிகம் செய்ய யோசிக்கிறோம்.

ஆங்கிலத்தில் ஒன்னு சொல்வாங்க 'charity starts at home' இது சொல்லப்பட்ட அர்த்தம் சரியாய் தெரியலை, ஆனால் நான் என்ன நினைக்கிறன் அப்படினா, நீங்கள் அநாதை இல்லம், முதியோர் இல்லம் அப்படின்னு தேடி பொய் உதவி பண்ணனும் அப்படின்னு அவசியம் இல்லைங்க, உங்கள் வீட்டில் சந்திக்கும் மக்களிடையே உதவி பண்ணலாம், உதாரணத்துக்கு வீட்டில் வேலைபார்க்கும் வேலைகாரர்கள்,காவலர்கள்,காய்கறி விற்பவர்கள் அவர்கள் மருத்துவ செலவு, பிள்ளைகள் படிப்பு செலவு, இப்படி நாம தினம் தினம் சந்திக்கும் மக்களுக்கே உதவி பண்ண பழகலாம். சில விவசாய மக்களை பற்றி நான் கேள்வி பட்ட விஷயத்தயும் எழுதிடுறேன், அவர்கள் அறுவடை பண்ணும் போது, அந்த அறுவடை சிலவற்றை வேணும்னே விட்டு வைப்பாங்கலாம், ஏழை மக்கள்,கஷ்டபடுறவர்கள் எடுத்துகிரதுக்காக.

என்னங்க நிறைய அறிவுரை பண்றேனா, என்னங்க பண்றது நமக்கு ரொம்ப எளிதா வரது ரெண்டு விஷயம்ங்க, ஒன்னு கேள்வி கேட்கறது, இன்னொன்னு அறிவுரை பண்றது,

சரி முடிக்கிறதுகு முன்னாடி இன்னும் ரெண்டு விஷயம் சொல்லிடுறேன்.

"வலது கையில் பண்றது இடது கைக்கே தெரிய கூடாது"
இதன் அர்த்தம், நாம பண்ணும் இந்த மாதிரி உதவிகள், விளம்பரத்துகாகவோ, விளம்பரப்டுத்தவோ கூடாது.
"ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்"
இந்த ரெண்டு வாக்கியங்களும் பைபிளில் வரும் முக்கியமான வசனம்ங்க.

Tuesday, October 20, 2009

தேசத்திற்காக உயிர்கொடுப்போம்.

நமக்கு எப்போதுமே புது படம் பார்த்துட்டு வந்து, அதை பார்க்கிறதுக்கு பயங்கர ஆர்வமா இருக்கரவன்ட போய் படத்துல வர சஸ்பென்ஸ் எல்லாத்தையும் சொல்லி, அவிங்கள படம் பார்க்கும் போது வரும் ஆர்வத்தை குறைக்கிறது தாங்க வேலை.

சரிங்க இந்த தீபாவளி ரிலீஸ் ரொம்ப எதிர்பார்க்க பட்ட படம் ஆதவன் அதை பத்தி சுத்தமா எழுத விருப்பம் இல்லை, ஏன்னா படம் அந்த மாதிரி. முழுக்க முழுக்க சூர்யா கூடவே வடிவேலுவும் வரார், இது ஒரு ஆக்க்ஷன் படமா, சஸ்பென்ஸ் படமா, இல்லை காமெடி படமானு கடைசி வரைக்கும் புரியவே இல்லை. சூர்யா, பத்து வயசு சிறுவனா ஒரு அஞ்சு நிமிஷம் வருவார், அந்த காட்சி எடுத்தவனை ஒரு தடவை பாராடிட்டு, இதுக்கு மேல இந்த மாதிரி முயற்சி எல்லாம் பண்ண வேணாம்னு கை எடுத்து கும்பிடலாம்.

சரிங்க, 'ஆதவன்' பார்த்த பாதிப்போ என்னமோ தெரியலைங்க "பேராண்மை" படம் ஒரு அளவுக்கு நல்லாவே இருந்தது பார்க்க, தேசபற்றை மையமா வச்சும், மலை வாசிகளை வைத்தும் படம் எடுத்திருகார்கள். படம் பார்க்கும் போதே NSS மேல நிறைய மதிப்பு வருது, இந்த படத்தில் முதல் பாதி, நிறைய இடத்தில் கட், மலை ஆதிவாசிகளை பற்றி தப்பானா வசனங்கள் தான் காரணம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் பாட்டு ஒன்னும் நல்லா இல்லைங்க, நிறைய பாட்டும் வந்த மாதிரி தெரியலை. ஐந்து அம்மணிகள் வராங்க, ஒரு இடத்தில் தேசத்துக்காக உயிர் கொடுப்போம்னு துப்பாக்கிய தூக்கி உறுதிமொழி எடுப்பாங்க, நல்ல காட்சிங்க அது.

Friday, October 16, 2009

பிரபல மன்னிப்புகள்

உண்மையில் மன்னிப்பு என்ற வார்த்தை பல கசப்பான சம்பவங்களை மறக்க வைக்க கூடிய  ஓர் வார்த்தை என்றே நினைக்கிறன்.இந்த வாரம் எனக்கு பிடித்த, பிடிக்காத, எதிர்பார்த்த மன்னிப்புகளை பற்றி பாப்போம்.

பிடித்த மன்னிப்புகள்.

காங்கிரஸ் பாப்ரி மஸ்ஜித் சம்பவத்திற்காக முஸ்லிம்களிடம் கேட்ட மன்னிப்பு (வோட்டு).
கெவின் ரட், ஆஸ்திரேலியா பிரதமர், அபோரிஜின் இனத்தாரிடம் கேட்ட.
திருமதி ஸ்டைன்ஸ், தன குழந்தை, கணவர் கொன்றவர்களை மன்னித்தது(ஒரிசா).

அமிதாப் பச்சன், கரன் ஜோகர், ராஜ் தாக்ரேவிடம் விடம் கேட்ட.
ரஜினி டாக்டர் ராமதாஸ்விடம் கேட்ட.
நோபெல் வெங்கி, இந்தியர்களிடம் கேட்ட.
சோனியா காந்தி, நளினியை மன்னித்தது.

பிடிக்காத மன்னிப்பு.

ரஜினி கன்னடிகர்கள்  கிட்ட கேட்ட,
குஷ்பு அழுகையுடன் கேட்ட.

கேட்கபடாத மன்னிப்புகள்.

நரேந்திர மோடி, குஜராத் முஸ்லிம்களிடம்.
இங்கிலாந்து அரசி, ஜாலியன் வாலா பாக் சென்ற போது. கேட்கபடாத.
சாம் ஆன்டேர்சன் படம் பார்க்க வைத்த ரெண்டு நண்பர்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும்


கேள்வி பகுதி

சென்ற வார பதில் உதம் சிங், ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்த்திய மேஜர் டயரை கொன்றவர்.

இவர் யாருங்க ? ஒரு மொக்கை க்லு அடிகடி டீ கடை போறவங்களுக்கு நியாபகம் வரலாம்.


Friday, October 9, 2009

டவுட் டனபாலு, கிச்சடி.

எந்த செய்தியானாலும் படம் புடிச்சு போடும் தினமலர் , எடிட்டர் கைது செய்ததை படம் பிடிக்காம ஏன் விட்டார்கள், இத்தனைக்கும் அவர்கள் அலுவலத்தில் தான் நடந்துருக்கு, அத்து மீறி போலீஸ் நுழைந்தார்கள், வார்ரன்ட் இல்லாம வந்தார்கள் அப்படின்னு செய்தியை மட்டும் போடறாங்க. நம்ம சாணக்கிய முதல்வரை "அம்மா" கைது பண்ணும் பொது அவர்களை சேர்ந்தோர் எப்படி படம் பிடித்து காமிச்சாங்க. அப்படில இருக்கனும். என்னப்பா லெனின் நடிகை படம் போட தெரிந்த உங்களுக்கு, உங்கள் கைது படம் எடுக்க முடியாமல் போன காரணம் தான் என்ன?

மூடப்பட்டுள்ள "ஸ்பிக்' ஆலையை ஒரு மாதத்தில் திறக்க நடவடிக்கை --தினமணி (ஆமாங்க இப்பலாம் தினமலர் படிக்கிரதில்லை ) . இது நடப்பதற்கு எங்க ஊரு அமைச்சருக்கு முக்கிய பங்காம், இந்த விஷயத்தில் எந்த கேள்வியும் இல்லை, ஏன்னா அவர் எங்க ஊருகாரர்.

ஹிட்லர் மண்டை ஓடுன்னு சொல்லி ரஷ்யாவில் வைத்திருகிறார்கள், இதை ஆராய்ச்சி செய்த அமெரிக்கர்கள், ஒரு ஆணின் மண்டை ஒடுகான கணம் இல்லையாம் அதில், அது ஒரு பெண்ணின் மண்டை ஓடாக இருக்கலாம்னு சொல்றாங்க. உண்மையிலே அது அவர் மண்டை ஓடா இருந்தா ஹிட்லர் தலைகணம், திமிரு இல்லாத ஒரு கொடுங்கோல் அதிபரா இருப்பாரோ ?

வாரா வாரம் என்னுடைய பதிவில் ஒரு பொது அறிவு கேள்வி கேட்கலாம்னு இருக்கேன். வருட முடிவில் நிறைய பதில் சொன்னவர்களுக்கு தக்க பரிசு அளிக்கப்படும்.
இந்த படத்தில் இருக்கும் இந்தியர் யார், இவருக்கும் சுதந்திர போராட்டத்தில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்துக்கும் தொடர்பு இருக்கு
உன்டு. என்னுடைய ஆங்கில பதிவில் இந்த கேள்வி கேட்டு யாரும் பதில் சொல்ல வில்லை, நீங்கள் முயற்சித்து பாருங்கள்.Wednesday, October 7, 2009

இயற்கை

சந்திரனுக்கு ஒரு விண்கலம் அனுப்ச்ச நாம சும்மா போட்டோ எடுத்ததோடு நிக்காம, நிலவில் தண்ணி இருக்குன்னும் கண்டுபிடிச்சு உலகத்துக்கு சொன்னோம். எனக்கு என்னமோ இந்த தண்ணீர் கண்டுபிடிப்பில் இயற்கை அன்னை ரொம்பவே கோபம் ஆகிடாங்கனு நினைகிறேன்.

இது வரைக்கும் வறட்சி நிதி கேட்டுட்டு இருந்த மாநிலங்கள் இப்ப வெள்ளம் நிதி கேட்கும் அளவுக்கு மோசமாக இருக்கு. ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் ரொம்பவே கஷ்ட நிலைமையில் இருக்குங்க. உள்துறை அமைச்சர் அரசு நிதி குடுப்பதில் பற்றாக்குறையே இருக்காது அப்படின்னு சொல்றார், என்னுடைய பிராத்தினை இந்த நிதி உதவிகள் கஷ்டப்படற மக்களை சரியாக சென்றடயனும். வறட்சி சமயத்தில் மக்கள் அவுங்க தங்கறதுக்கு வீடும், அவுங்க உடமையும் இருந்தது. இப்ப வெள்ளத்துக்கு அப்புறம் வீடு, உடமை இழந்து நிறைய பேர் நிக்குறாங்க.

தேக்கடில நடந்த விபத்தை நினைத்தா இன்னும் கஷ்டமா இருக்குங்க, அந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் சுத்தமா நீச்சலே தெரியாத நாம, கேரளாவில் ஒரு சுற்றுலா தளத்தில், அதிக கூட்டமுடன் ஒரு படகில் நண்பர்களுடம் கேலியும் குத்துமாக சென்று வந்தேன். இனிமேலாவது படகு சவாரி பண்ணும் முன்பு 'உயிர் காப்பு அங்கி' மற்ற பாதுகாப்பு வசதி இருக்கானு பாத்திட்டு தான் சவாரி செல்லனுங்க

பசுபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவு தாங்க சமோவா தீவு, சென்ற வாரத்தில் சுனாமி இந்த தீவை தாக்கி இருக்கு , சுனாமி எச்சரிக்கை சரியான சமயத்தில் வந்ததாலும், கடல் உள்வாங்கியதை பார்த்தும் மக்கள் கொஞ்சம் உஷாராய் இருந்திருக்காங்க, இருந்தாலும் அடிச்ச சுனாமி சுமார் நுறு உயிருக்கும் மேல எடுத்துட்டு , அந்த தீவை ஒரு துவசம் பண்ணிட்டு போயிருச்சுங்க.

இன்னொரு இயற்கை அழிவும் நடந்துறுக்கு சென்ற வாரத்தில், இந்தோனேசியா நில நடுக்கம் ஆயிரகணக்கான மக்கள் புதைக்க பட்டு இறந்துடாங்க. ஒரு வாரத்தில் இவளவு சம்பவங்களா ? எனக்கு தான் இப்படி தெரியுதா இல்லை உலகத்தில் ரொம்ப சாதரணாம இந்த மாதிரி வார வாரம் நடந்துட்டு தான் இருக்கா ?

Monday, October 5, 2009

இன்றைய அரசியல்

ஜார்ஜ் பிர்ணண்டேஸ், இவர் தன்னுடைய உடை அவரே தான் அயர்ன் பண்ணுவாராம், அமைச்சர இருந்த போதும் கூட அவர் சொந்த வாகனத்தில், தானே ஓட்டிட்டு தான் வருவார் அலுவகத்துக்கு. கார்கில் போரின்போது பாதுகாப்பு அமைச்சரா இருந்தவரும் இவரே.

மம்தா பநேர்ஜீ , ஒரு தூக்கு பையோட தான் பார்பீர்கள் இவரை, அமைச்சரா இருந்தாலும் சாதரண வகுப்பில் தான் பயணம் செய்வார், பொது தேர்தல் சமயத்தில் TATA நிறுவனம் பல கோடி அவருடைய கட்சிக்காக நிதி தந்தது, அதை நிராகரித்தவர். சிங்குரில் இருந்து TATA வை விரட்டி அடிதாவரும் இவரே.

சிதம்பரம், உள்துறை அமைச்சர், இவர் உயிருக்கு ஆபத்து என்றாலும், பெரும்பாலும் எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் எல்லா இடத்துக்கும் செல்பவர், அவருடைய பாதுகாப்பு அரசுக்கு வெட்டி செலவு என்று நினைப்பவர்.

எதுக்காக வெவ்வேறு கட்சியில் இருக்கும் இவர்களை பத்தி எழுதினேன்? விஷயம் இருக்குங்க நம்முடைய நாட்டில் அரசியல்வாதி அப்படின்னு சொன்னாலே மோசடி பண்றவன், ஊழல் பண்றவன், இப்படி தாங்க நினைப்போம். இன்னும் நமக்கு தெரியாத பல பேர் இருகாங்க அரசியலில், இவர்களை விட யோக்கியமா, நேர்மையா வாழறவங்க. சமீபத்தில் உத்திரப்ரதேசம் மாநிலத்தில் காந்தி ஜெயந்தி நாளில் எல்லா காங்கிரஸ் mla,mp கல், தலித் வீட்டில் ஒரு நாள் இருந்தார்கள். எனக்கு தெரிந்த நண்பர்கள் பலர், "பாருடா எவ்ளோ விளம்பரம் பண்றாங்க பாருங்க, இவிங்க ஒரு நாள் போறதால அவிங்களுக்கு என்ன ப்ருயோஜனம், இது சுத்த ஏமாற்றுத்தனம்" அப்படின்னு சொன்னாங்க, நம்ம ஊடகங்களும் இதே பாணியில் செய்திகளை போட்டு காமிச்சாங்க.

சாதரணமா தேர்தல் சமயத்தில் வீட்டுக்கு போகும் அரசியல்வாதிகளை, அஞ்சு வருஷமா இந்த பக்கம் வரலை, ஒட்டு கேட்கும் போது மட்டும் வரான் அப்படின்னு சொல்லுவோம். இப்ப தேர்தல் இல்லாத சமயத்தில் வந்தாலும் பிரச்சினை. வராம இருந்தாலும் பிரச்சினை, ஏழைகள் கஷ்டம் இவனுக்கு எப்படி தெரியும்? அப்படின்னு ஒரு கேள்வி கேட்போம். இதே சம்பவத்தை மக்களும், செய்தி தாள்களும் கொஞ்சம் ஊக்குவிக்கும் வகையாக சொல்லிருந்த, உத்திரபிரதேசம் மாநிலத்தில் நடந்த இந்த சம்பவம் பல மாநிலங்களிலும் நடந்துராதா? ஏழைகள் கஷ்டம் கொஞ்சமாவது தீராதா? எனக்கு தெரிஞ்சு கொஞ்சமாவது தீரும், கண்டிப்பா.

அறுபது வருட இந்தியாவில், இந்த அரசியல்வாதிகளால் தான் நாடு முன்னேறவே இல்லை அப்படினும் ஒரு சாரார் புலம்புவார்கள், இப்படி சொல்லும் போதெல்லாம் எனக்கு அமெரிக்க ஜனாதிபதி சொன்ன வாக்கியம் தாங்க நினைவுக்கு வரும் "Ask not what the country did for you, ask what you did for the country". அதாவது "உங்கள் நாடு உங்களுக்கு என்ன பண்ணது அப்படின்னு கேட்காதீர்கள், நீங்கள் நாட்டுக்காக என்ன பண்ணீர்கள் என்று கேட்டு பாருங்கள்" என்று சொன்னார். எவ்ளோ பேருங்க ஒழுங்கா வரி கட்டுறோம், ஒழுங்கா நிலம்,வீடு சரியான விலைக்கு பதிவு பண்றோம், எவ்ளோ பேரு லஞ்சம் கொடுத்து வேலை வாங்குறோம், லஞ்சம் வாங்கி வேலை பண்றோம், எவ்ளோ பேரு ஒழுங்கா ஒட்டு போடுறோம் தேர்தலில், இந்த மாதிரி பிரச்சினை நம்மிடம் நிறைய இருக்கு.

மேல சொன்ன அமைச்சர்கள், இவர்கள் மேலயும் ஊழல் குற்றசாட்டுகள் இருக்கு இல்லைன்னு சொல்லலை, யோசிச்சு பாருங்க சத்யம் முதலாளி ராமலிங்க ராஜு, 7000 கோடி ஊழல், நாஸ்காம் கடந்த அதிபர் கிரண் கிராம்னிக், வருமான வரி ஊழளில் மாட்டிட்டு முழிச்சிட்டு இருக்கார், இன்னும் நிறைய தகவல்தொழில்நுட்பதுரை "சான்றோர்களும்" ஊழல் பண்ணிட்டு தானே இருகாங்க . அதுக்காக தகவல் தொழில்நுட்பத்துறை இருப்பவர்கள் எல்லாரும் ஊழல்வாதிகள் அப்படின்னு சொல்லிடலாமா. நானும் தகவல் தொழில்நுட்பத்துறையில் தான் இருக்கேன், எனக்கு தெரியும் எப்படி எப்படிலாம் கிளயன்ட் எமாத்துகிறார்கள் என்று.

அரசியல்வாதிகள் ஊழல் பன்றவர்களாக இருந்தாலும், அவர்கள் பண்ணும் சில நல்ல விஷயங்களை நாம பாராட்டி தான் ஆகணும், அப்ப தான் அந்த விஷயம் மற்ற எடத்துக்கும் பரவும், மக்களை சென்றடையும். அது எனக்கு தெரிஞ்சு ஒரே ஒரு சமயம் தான் நடக்கும் எப்பனா, அந்த ஆளு சட்டுன்னு செத்தா, சமீபத்தில் Y.S.R புகழாதவர்களே கிடையாது.

அரசியலில் பிடிக்காத காரியம் இருக்குங்க, அதாவது பிரிவினை அரசியல் ஆங்கிலத்தில் divisive politics அப்படின்னு சொல்லலாம், உதரணத்துக்கு, RSS, நரேந்திர மோடி, வருன் காந்தி, இவர்களை போன்றோர் ஒரு சமுகத்தை இன்னொரு சமூகத்துக்கு எதிரா தூண்டி விட்டு, அதன் மூலம் அரசியலில் பெரிய ஆளாக நினைப்பது. இது ரொம்பவே ஆபத்தான ஒரு அரசியலுங்க, பல பேரை பலிகொண்ட ஒரு அரசியலும் கூட.

சரிங்க நிறைய எழுதிட்டேனு நினைகிறேன், இதுவரைக்கும் படித்து இருந்தால் மிக்க நன்றி, உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக எழுதலாம்

Sunday, October 4, 2009

கொத்து பரோட்டா

நான் இந்த பதிவுக்கு ஏன் இந்த பேர் வச்சேன் என்று யாராவது கேட்கலாம், அட அப்படி யாரும் கேட்கலைனாலும் நானே சொல்லுவேங்க.

வாரத்துக்கு ஒரு தடவையாவது நான் பெரும்பாலும் கொத்து பரோட்டா சாபிடுவது வழக்கம். அதே வழக்கத்தோடு வாரத்துக்கு ஒரு முறையாவது தமிழில் பதிவு எழுதுவேன் ஒரு நம்பிக்கை, அதாங்க இந்த பேர். எப்படிங்க லாஜிக் நல்லா இருக்கா ?.

சரி எதுக்கு மதுரை திருச்சின்னு ஊரு பேருலாம் லிங்க்ல வச்சிக்கிட்டு ? பிறந்தது திருச்சிங்க, ஆனால் வளர்ந்தது தமிழை சங்கம் வைத்து வளர்த்த ஊருங்க, ஆமாங்க மதுரை. மதுரைல கூடல்நகர் அப்படின்ற பகுதி, வைகை ஆற்றங்கரைலிருந்து ஒரு நான்கு அஞ்சு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதி. அட சொல்ல மறந்துட்டேன் பாருங்க, மதுரை கொத்து பரோட்டா க்கு ரொம்ப பிரபலம்.

சரி விஷயத்துக்கு வருவோம், நமக்கு பல துறைல பயங்கர ஆர்வ கோளாறு. அதனால பெரும்பாலும் இந்த பதிவு விளையாட்டு, அரசியல், சினிமா, மருத்துவம், வியாபாரம், என்னுடைய அனுபவம், இதை பற்றி இருக்கும்.