Friday, April 2, 2010

குரங்கு, தட்டச்சு, பரிணாமம்

ஆங்கிலத்தில் "Infinite Monkey Theorem" பற்றி நான் படித்த சில விஷயங்கள் தான் இந்த பதிவின் நோக்கம், மற்றும் பரிணாம கோட்பாட்டில் எனக்கு இருக்கும் சில சந்தேகேங்களும் இந்த பதிவை தொடர்ந்து மற்ற பதிவுகளில் எழுத முயற்சிக்கிறேன்.


 இந்த தேற்றத்தின்(Theorem) விளக்கம் கீழ்வருமாறு

அதாவதாக ஆகபட்டது என்னவென்றால், ஒரு குரங்கை ஒரு தட்டச்சுப்பொறி முன்பாக உட்கார வைத்து பொட்டியை தொடர்ந்து தட்ட செய்தால் கணிப்பு வரம்புகடந்த காலகட்டத்தில் அது "பெரும்பாலும் கண்டிப்பாக " ஷேக்ச்பியரின்  ஹாம்லெட்  (shakesphere's hamlet) புத்தகத்தை முழுவதுமாக அடித்து கொடுத்து விடுமாம்.

கவனிக்க ""பெரும்பாலும் கண்டிப்பாக"  என்ற வார்த்தையை ...ஆங்கிலத்தில் இது "almost surely"  அப்படி என்று வரும்.




















பரிணாம உயிர் நூல் அறிஞர்கள் (evolutionary biologist) இந்த தேற்றத்தை வைத்து ..டார்வினின்  natural selection மற்றும் origin of species விளக்க முயற்சிகிறார்கள்..

சுருக்கமா சொல்ல போனால்...எங்கயோ ஏதோ குரங்கோ, குரங்கு மாதிரி ஒரு ஜீவனமோ, அல்லது இந்த குரங்கின் செயலுக்கு ஏற்ற ஒரு செயலோ (அதாங்க பொட்டியை தட்டுற மாதிரி)  காரணத்தினால் தான் மனிதன் உருவானான் அப்படி சொல்ல முயற்சிக்கிறது. வேறுவிதமாக சொன்னால், ஒரு மேஜை மீது  206 எலும்புகள் வைத்து..ஒரு குரங்கு கூட்டத்தை அந்த அறையில் விட்டால்....அந்த குரங்கு கூட்டத்தினால் உங்களையும் என்னையும் மாதிரி ஒரு மனிதனை உருவாக்க முடியும் போல இருக்கு...

என்னாடா இவன் ..புரியாத நாலு வார்த்தையை எழுதி,லூசுத்தனமா அறிவியல் பத்தி எழுதறான் நினைக்கிறீங்களா. வேற என்னங்க பண்றது,  கண்மூடி தனமா எதையும் நம்ப கூடாது அப்படின்னு "பகுத்தறிவாளர்கள்" பண்ணும் பிரசாரம் கேட்டா, இப்படி தான் யோசிக்க தோணுது.


எனக்கு இப்ப தற்போதைய ஆச்சரியமே...கடவுள் இருக்காரா ?...அவரை கண்ணுல காமிங்க ?  கடவுளை யாரு படைச்சா ? அப்படி இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்க்கும்...கடவுள் மறுப்பு குழுமினர்கள், இந்த குரங்கு தேற்றம்..போன்ற பல " ஐயநிலையான காரணங்களை" (hypothetical explanation) புத்தகத்தில் படித்து, அப்படியே பரிணாமம், பிக்-பாங்,மனிதன் தோற்றம்..இவைகளை நேரில் பார்த்த மாதிரி பதிவுலகில் எழுதி கொண்டு இருக்கிறார்கள்....அவர்களுக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது, கடவுள் நம்பிக்கை என்பது மனிதனின் சக்திக்கு அப்பார்பாட்ட ஒரு ஒப்புயர்வற்ற சக்தி என்பதாக  பலருக்கு இருக்கலாம்....நம்பிக்கை தான். ஆனால் உங்களுக்கு இந்த மாதிரி ஐயநிலையான காரணங்களை நம்பும்  "நம்பிக்கை"   இருக்கே...அதை பார்த்து மத நம்பிக்கையாளர்கள் பொறாமை பட வேண்டும்..அந்த "நம்பிக்கையை" இங்கு பாராட்டி ஆக வேண்டும


Monday, February 1, 2010

ஆஸ்திரேலியா இனவாதம்

சென்ற வருடம் மே-ஜூன் மாதம் இருக்கும், பொது தேர்தல் முடிந்து எல்லா ஆராவாரங்களும் அடங்கி இருந்த சமயம், ஊடகங்கள் தலைப்பு செய்திகள் ஒன்னும் ஓடாமல் இருந்தன, அப்ப தான் ஆஸ்திரேலியாவில், இந்தியர்கள் தாக்குதல் பிரச்சினை ஆரம்பித்தது, ஊடகங்கள் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் ஓவர்-டிரைவில் பிரச்னையை போட்டு காமிக்க தொடங்கினார்கள், காலையில் எழுந்து செய்திகள் போட்டால்  முதலில் பார்க்கும் வீடியோ, இந்திய மாணவர் வயிற்றில் பத்து-பதினைந்து தையல் இருக்கும், இல்லைனா முகம் பூரா ரத்த கட்டியோட வீங்கி போகிருக்கும். ஆங்காங்கே இந்த தாக்குதலை கண்டித்து மாணவர்களும், கட்சிகளும் கண்டன ஊர்வலம் செய்து கொண்டு இருந்தார்கள்(சென்னையிலும் கூட) . அப்போதைய சூழலில் அதை பற்றி கொஞ்சம் நெகடிவ் விமர்சினம் பண்ணி , அதில் தேவையில்லாமல் ஒட்டு மொத்த வெளிநாட்டுவாழ் இந்தியர்களையும் தாக்கி   ஒரு பதிவு எழுதிவிட்டேன்.

சக தமிழ் பதிவர்கள், ட்விட்டர்கள்  இந்த விஷயம் பற்றி பேசினால் அடிக்கடி  மீனவர் பிரச்சினை, தலித் பிரச்சினை, ஆதிவாசிகள் பிரச்சினை, மலேசியா தமிழர் பிரச்சினை....இப்படி பல இனவாதம் பிரச்சினைகளை கூறி, அதற்கலாம் முதலில் கவலைபடுங்கள் பிறகு நாம ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களை பற்றி யோசிக்கலாம் என்று சொல்லுவார்கள்...ஆரம்பத்தில் இவர்கள் சொல்லுவதில் விஷயம் இருப்பதாக தோன்றினாலும், சற்று உன்னிப்பாக கவனித்தால்  இவர்கள் வட நாட்டவர்கள் மீது இருக்கும் ஒரு வெறுப்பினாலே இப்படி சொல்லுகிறார்கள் என்றும்  தோன்றியது. வட நாடு-தென் நாடு பிரிவினை இதில் தான் நிருபிக்கனுமா. ஒரு கல்லூரிக்குள் எவ்வளவு உள் சண்டை போட்டாலும், கல்லூரி வேற்றார் பிரச்சினை பண்ணால் ஒன்றாக சேர மாட்டோமா (கொஞ்சம் கடியான ஒப்பிடு தான், வேற ஒன்னும் தோணலை).

சரி இப்ப பத்து மாதங்கள் மேல ஆகியும் தாக்குதல் நிற்கும் மாதிரி தெரியவில்லை, நிலைமை இன்னும் மோசம் ஆகி விட்டது, ரெண்டு மூன்று கொலைகளும்  நடந்தேறி விட்டன. அங்கு இருக்கும் இந்திய குடிஉரிமை உள்ள மக்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கு.மக்களே !!  "எந்த ஊரு போனாலும் அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும்னு" காக்க காக்க வில்லன் சொல்லுவார், அதெல்லாம் ஆஸ்திரேலியாவில் பண்ண முடியாது போல இருக்கு, தயவு செய்து திரும்பி வந்து விடுங்கள், நம்ம நாடும் ஒரு அளவுக்கு முன்னேறி தான் இருக்கு.

 இப்போது இந்த தாக்குதலுக்கு ஒரு சில காரணங்களை  பார்க்கலாம். (இது ஒரு ஆங்கில வார இதழில் படித்தது )

  1. இந்திய வம்ச வாழ் மக்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லையாம், ஒரு சீனா காரனை அடித்தால், எல்லா சீனா காரனும் ஒன்றாக சேர்ந்து எதிர் தாக்குதல்  பண்ணுவாங்களாம், அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்குமாம். ஆனால் இந்தியா காரன் அடிச்சா முதல்ல மீடியாவிடம் தான் செல்கிறார்களாம். இந்திய குழுமங்களில் ஒரு நாலு பிரிவினை இருப்பதாக சொல்கிறார்கள், இதில் பணக்காரர்கள் ரொம்ப வசதியாக இருப்பவர்கள், இன்றும் இனவாத தாக்குதல் ஒன்றும் இல்லை என்றே அடம் பிடிக்கிறார்கள், இவர்கள் பெரும்பாலும் வசதியான சொந்த வண்டியில் போவதாலும், பணக்கார இடங்களில் வாழ்வதாலும், இவர்களுக்கு பிரச்சினை இல்லை. பொதுவாக தாக்குதல் இரவு நேரத்தில், பொது போக்குவரத்தில், தனிமையான இடங்களில் நடப்பது அறிந்திருக்கலாம்...அவ்வாறன இடத்திற்கு இந்த பணக்கார இந்தியர்கள் போவதே கிடையாதாம் (divisions in community).

  2. இந்திய மாணவர்கள் எப்போதும் கையில் லேப்டாப், ஐ-போட், நிறைய பணத்தோட தான் அலைவார்கலாம், இதனால் அவர்கள் மேல ஆன தாக்குதல் இனவாத தாக்குதல் என்று சொல்வதை விட, வழிப்பறி கொள்ளைகள் ஆக கூட இருக்கலாம். நம்ம ஊர் காரைங்க, எல்லாரும் சேர்ந்து ஷேரிங் ரூமில் தங்குவதால்,  அவர்கள் ரூமில் இந்த சாமான்களை வைப்பதை விட, அவர்கள் கைகளில் எடுத்து செல்வது தான் வசதியாக இருப்பதாலும் , வங்கிகளில் பணத்தை வைப்பதும் நிறைய போர்மளிட்டி இருப்பதால், அவர்கள் பணத்தை எப்போதும் கைகளில் கொண்டு செல்கிறார்கள். (soft targets)

  3. ஒரு ஆஸ்திரேலியன், காலையில் இருந்து இரவு வரை, அவன் போகும் எல்லா இடத்திலும் ஒரு இந்தியன் பார்க்கும் ஒரு சூழல் உருவாகி விட்டது. பொது போக்குவரத்திலோ, பெட்ரோல் நிலையத்திலோ, சாப்பாடு பரிமாறும் இடத்திலோ, டாக்ஸி பயனித்தாலோ...எங்கே சென்றாலும் ஒரு இந்தியன் வேளையில் இருப்பதால், முக்கியமாக இந்த பொருளாதார மந்த சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட ஆஸ்திரேலியா வர்க்கத்தை ரொம்பவும் பாதித்து விட்டதாக சொல்கிறார்கள். அதனாலேயும் இந்த தாக்குதல் இருக்கலாம்.

மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் ஆஸ்திரேலியா இனவாதம் இருக்கும் ஒரு நாடாகவே தோன்றுகிறது, சீக்கிரமாக அங்கு உள்ள இந்திய வாழ் மக்களுக்கு இந்த பிரச்சினையில் இருந்து ஒரு தீர்வு கிடைக்கணும் என்று எதிர்பார்ப்போம். நன்றி.

.

Friday, January 29, 2010

ஹைடி, ஷாருக் பல்டி

ஐ.பி.எல்

இந்தியன் பிரீமியர் லீக் - அணி உரிமையாளர்கள் எல்லாரும் ஓட்டுக்க ஒரே ட்ராக்கில் போயிட்டு இருக்கும் பொது, திடீர்னு ஷாருக் கான் மட்டும் தடம் புரண்டு வேற ட்ராக்கில் ஓடிட்டு இருக்கார், பாகிஸ்தானி விளையாட்டு வீரர்கள் எடுக்காதது குறை கூறி, இவரே ஒரு சிலரை எடுக்க முயற்சிகள் நடக்கிறது. இந்த திடீர் ஞானோதேயத்தை, இந்திய -பாகிஸ்தான் நல்லுறவுகாக எடுக்க பட்ட முடிவுன்னு மட்டும் யாரும் நினைக்க வேண்டாம்.அடுத்த மாதம் இவர் படம் ஒன்று வெளி வருதாம் "மை நேம் இஸ் கான்", இவருடைய சமீப கால படங்கள் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களிடம் இருந்தும், பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் இருந்தும் நல்ல வசூல் கிடைத்து இருப்பதால், அந்த வசூலில் பிரச்சினை வர கூடாதுன்னு ஹீரோ பம்முகிறார்.

'குசேலன்' படத்திற்காக தலைவர் கன்னடிகர்கிளிடம் அடித்த 'பல்டி' பார்த்தவங்க நாங்க, இதெல்லாம் சப்ப மாட்டேர்..

---

ஹைடி(haiti)

ஹைடி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, உலகத்தில் இருக்கும் முன்னணி கால்பந்து வீரர்கள் சேர்ந்து ஒரு மேட்ச் விளையாடினார்கள், இதில் ஜிடனே (zidane) ,ஹென்றி (henry),காகா(kaka)..என்று ஒரு பெரிய நட்சத்திர வீர்கள் கூட்டம் விளையாடினது, இந்திய அணி தலைவர் பைசுங் பூட்டியா  இதில் விளையாடி, ஒரு கோல் அடித்து கலக்கிருக்கார். மட்டைபந்து (கிரிக்கெட்) நட்சத்திரங்கள் சேர்ந்து இதே மாதிரி உதவி பண்ணா நல்லா இருக்கும். ஹைடி நிலநடுக்கத்தில் உயிர் இறந்தவர்கள் எண்ணிக்கை ரெண்டு லட்சம் இருக்கும்னு சொல்றாங்க.





சரி ...இப்ப நாம கேள்வி பகுதி..முடிந்தால் படத்தில் இருப்பவரை கண்டுபிடியுங்கள். நன்றி.


Wednesday, January 27, 2010

Sammy = சாமுவேல் | Samuel

ஆரம்பத்தில் பதிவர் ஒருவர் அவருடைய பதிவில் எனக்கு மறுமொழி எழுதும் போது 'சாமி' என்று அழைத்து பதில் எழுதினார், சரி 'sammy' என்ற ஆங்கில சொல்லை தவறுதலாக 'சாமி' என்று எழுதிட்டார் போல இருக்கு அப்படின்னு நினைச்சேன், ஆனா தொடர்ந்து நான் பின்னூட்டம் இடும் எல்லாருடைய பதிவுகளிலும் என்னை 'சாமி' என்றே பதிவர்கள் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஓரளவுக்கு பக்தி உள்ள வாழ்க்கை வாழ்ந்தாலும், 'சாமி' என்ற சொல் நமக்கு சற்றும் பொருந்தாத சொல்லாக இருக்கு (இதை கேட்டாவது திருந்தின வாழ்க்கை வாழு அப்படின்னு சொல்றீங்களா ..ரைட்டு.)

இதில் இன்னொரு கொடுமையான விஷயம், ஒரு காரா சாராமணா விவாதத்தில், ஏதோ புள்ளி விவரம் கொடுத்து என்னுடைய கருத்தை சொல்ல முயன்று கொண்டு இருந்தேன். அதற்கு எதிர் கருத்து சொன்ன நாத்திக நண்பர் ஒருவர் "சாமி" என்ற பெயரில் யாரவது ஏதாவது சொன்னால் நாங்க நம்ப மாட்டோம்னு சொல்லி என்னுடைய வாயை அடைச்சிட்டார்.

சென்ற இடுகையில் பலருக்கும் தமிழில் எழுத வழிகாட்டியா இருக்கும் மூத்த பதிவர் கோவியார், ஒரு அளவு மேல சென்று "சாமியோவ்" அப்படின்னு எழுதிட்டார். இதுக்கும் மேல 'அன்பே சிவம்' மேடி (maddy) மாதிரி முழிச்சிட்டு இருப்பது சரியா இல்லை. அதனால போர்க்கால அடிப்படையில் பெயர் மாற்றம் பண்ண வேண்டி ஆகிவிட்டது.

சாமுவேல் | Samuel

.

Wednesday, January 20, 2010

வீர, தீர விருது ...விளையாட்டு

சிறுவர்களுக்கான வீர செயல்கள் விருது இந்திய அரசால் (indian council for child welfare) அறிவிக்க பட்டு இருக்கிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 21 பேர் விருது பெற போகிறார்கள்.

க்ஹுமந்தேம், எட்டு வயது மணிப்புரி சிறுமி இவர், நான்கு வயது சிறுவன் ஒருவன் குளத்தில் விழுந்த போது, நீச்சல் தெரியாத இவர் குதித்து காப்பாற்றி இருக்கார். இவருடைய தாயார் ஒரு மருத்துவர், இவருக்கும் மருத்துவர் ஆகனும் என்று ஆசை இருக்காம். கௌரவ் சிங்க், 13 வயது சிறுவன். ஐம்பது பேரை காப்பாற்றி இருக்காராம், பிரிட்டி தேவி 10 வயது சிறுமி அவர்களுடைய கடையில் வீசிய கை வெடிகுண்டை (grenade) சரியான சமயத்தில் அப்புறபடுத்தி, பல பேர் உயிரை காப்பாற்றி இருக்கார். இதை பற்றி செய்திகள் இங்கே.
 
நமக்கு இந்த வீர தீர செயல்கள் பன்னும் அளவிற்கு தைரியம் இருக்கானு தெரியலை, ஆனா இந்த வீர விளையாட்டில் நிறைய ஆர்வம் இருக்கு, ஒரு மாசம் முன்னதாகவே பயிற்சி ஆரம்பிச்சுட்டேன், இந்த வருடம் எங்க ஊரில் நடக்கும் மஞ்சுவிரட்டில் (ஜல்லிக்கட்டு) பங்கு கொள்வதற்கு, இதில் நண்பர்கள் சிலரையும் உசுப்பு ஏத்தி விட்டாச்சு. ஆனா சரியா பாருங்க பொங்கல் சமயத்தில் ஊருக்கு போகும் வாய்ப்பு கிடைக்க வில்லை. போகாததும் நல்லது தான் போல இருக்கு, இந்த வருடம் பார்வையாளர் கும்பலில் வேடிக்கை பார்த்த ஒருவரை தூக்கி வீசிருக்கு....முரட்டு காளை.

இந்த விருதுகள் என்றவுடன் மற்றொரு முக்கியமான விஷயமும் ஞாபகம் வருது, தமிழ்மணம் (blog aggregator), சிறந்த பதிவிற்கான போட்டி ஒன்று நடத்தியது, இந்த மாதிரி போட்டியில் பங்கு கொள்வதற்கு நமக்கு சுத்தமா அருகதை இல்லிங்கோ, நாம எழுதும் தமிழ் அந்த லட்சணத்தில் உள்ளது..என்னத்த பண்ண போங்க. சரி அதை விடுங்க ..இப்போ நாம முக்கியமான கடமை என்ன ? இந்த போட்டியில் பங்கு கொண்டவர்களையும், அதில் வெற்றி பெற்றவர்களையும் பாராட்டுவது தான் வேற என்ன ....(கை தட்டு சத்தம்). நான் தொடர்ந்து படிக்கும் சில பதிவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள், மகிழ்ச்சி. அதில் சிலர்..

ப்ருனோ -- இவர் 'மருத்துவரா'  இல்லை 'எழுத்தாளரா' அப்படின்னு ஒரு பெரிய குழப்பம் இருக்குங்க எனக்கு, வருடா வருடம் இவர் பாட்டுக்கு எல்லா பரிசையும் தட்டி செல்கிறார்.

கோவியர்- சிங்கப்பூர் கோவி.., பலராலும் மதிக்கபடும் மூத்த பதிவர், இவர் எழுதும் கருத்துகளுடன் இது வரை ஒத்து போனதாக எனக்கு ஞாபகம் இல்லை, இதினால் சில சமயம் இவரை சங்கட படுத்தியதும் உண்டு.

பீர் -- எங்க ஊர் காரர், இன்னும் இவரை சந்தித்ததில்லை, இவரையும் ஜல்லிக்கட்டு கூட்டிட்டு போறதாக உசுப்பு ஏத்தி இருந்தேன். இவர் பதிவு கார சார சண்டைகள் நடக்கும் ஒரு போர்க்களம்.

இப்ப நாம திருக்குறள் பகுதிக்கு செல்லலாம்.

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்,
நன்மை கடலின் பெரிது.
 
விரிவுரை : தனக்கு இன்ன பயன் தரும் எனக் கருதாது செய்த உதவியின் நற்பயனின் பண்பை ஆராய்ந்து நோக்கின், அதன் நன்மை கடலைக் காட்டிலும் பெரிது.

.

Saturday, January 9, 2010

குருவி படத்தில் Mr.Bean

Mr.Bean அனைவரும் விரும்பி பார்க்கும் பிரிட்டிஷ் காமெடி நடிகர், இவருடைய தனி திறமை பேசவே மாட்டார். இவர் மக்களை சிரிக்க வைப்பது வெறும் செயலினாலும், அவருடைய தோரனையினாலும் தான், அப்படியே ஏதாவது பேசினால் ஒன்னுமே புரியாத மாதிரி ஒரு சத்தம் மட்டுமே வரும், இருந்தாலும் வயிறு வலிக்க சிரிக்க மட்டும் வைத்துவிடுவார்....தமிழ் காமெடி நடிகர்கள் அதிகம் பேசினாலோ, உதை வாங்கினாலோ தான் நமக்கு சிரிப்பு வருது.

சரி எதற்கு ஒரு காமெடி நடிகரை வைத்து மொக்கை போடறேன்.. இன்னிக்கு காலைல இருந்து ஒரு பத்து, பதினைந்து தடவை இந்த வீடியோ பார்த்திட்டு இருக்கேன்...சிரிப்பு தாங்க முடியலை, நீங்களும் நல்ல சத்தம் வைத்து பாருங்கள்....தமிழ் சினிமாவில் mr.bean சம்பந்தபடுத்தி இருக்கும் ஒரு வீடியோ. (நன்றி யூடுப் ). ஏற்கனவே பார்த்த வீடியோவா இருந்தா.. ஒன்னி தப்பில்லை மறுபடியும் பாருங்க.




இவரும் டோனி ப்ளைரும் (முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்) ஒரே வகுப்பில் படித்தவர்களாம்.(கொசுறு செய்தி)

.

Friday, January 1, 2010

டபுள் போனஸ்

2009 வருடம் விறு விறுன்னு கடந்து போயிடுச்சுங்க, ஏதோ ஒரு பெரிய கினறு தாண்டின மாதிரி இருக்கு, வேற என்னங்க பண்றது இந்த பொருளாதார மந்த நிலைமை பிரச்சினை தான். புது வருடம் 2010 எல்லாருக்கும்,குறிப்பாக ஈழ தமிழர்களுக்கு சமாதானம், சந்தோஷம் நிறைந்த வருடமாக இருக்க வாழ்த்துக்கள்,பிராத்தனைகள்.  எனக்கு இருந்த ஒரு பெரிய கெட்ட பழக்கத்தை இந்த வருடம் விட்டரலாம்னு இருக்கேன், இணையத்தில் பதிவுகள் எழுதுவதை விட, பின்னுட்டம் எழுதுவது தான் எனக்கு பிடித்தம், ஆனால் பதிவுகள் எழுதும் போது வார்த்தைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவும், அடுத்தவர் பதிவில் பின்னுட்டம் எழுதும் போது சில சமயம் விடபடுகிறது, இதினால் சிலரை வெறுப்பு ஏத்தி விட்டதாக எனக்கு தோன்றிகிறது. சோ பின்னுட்டங்கள் ஒருவர் எழுதும் கருத்தை பற்றி மட்டுமே, தன்மையாக எழுத பழகவேண்டும்.

சென்ற வருடம் நிகழ்வுகளில் ரொம்ப நியாபகம் உள்ள விஷயம், பொது தேர்தல் முடிவுகள் தான். பா. ஜ .கா ஆட்சி அமையாதது முதல் சந்தோஷம்னா , கம்யூனிஸ்ட் கட்சியும் ஆட்சியில் பங்கு இல்லாமல் போனது, டபுள் போனஸ் சந்தோசம்.

விளையாட்டு துறையில் ஆஸ்திரேலியா யாருடனாவது தோற்று போனால் சந்தோஷமா இருக்கும் , அதுவும் போன வருடம், ஏதோ சாம்பல் வச்சு தொடர் இருக்காமே? அதில் தோற்றது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. இங்க்ளிஷ்காரன் பாண்டிங் முஞ்சில கரிய புசிடாங்க.

.

.

ஓகே வாசக்க்ஸ், இதுக்கு மேல சரியா எழுத வரமாட்டிக்குது அடுத்த பதிவில் சந்திக்கலாம்...பை பை....


.