Friday, November 20, 2009

தவறான ஒப்பீடுகள் ?

சச்சின் தேசியவாதி இல்லையாம்(அப்ப என்ன தீவிரவாதியா?),ஏன்னா அவர் மும்பை,குஜராத் கலவரம் போதும்,மகாராஷ்ட்ராவில் விவசாயிகள் தற்கொலை சாவு நடந்த போதும் அறிக்கை ஒன்னும் கொடுக்கலையாம். ரொம்ப எளிதா இவிங்க இதில் சேர்க்காமல் விட்ட விஷயம், நண்டிக்ரம்,லால்கர்க்,சிங்கூர் இந்த இடங்களில் ஏழை மக்கள் ஒடுக்கப்பட்டு,கொல்ல பட்ட சம்பவத்தை,ஏன்னா இவிங்க கம்யூனிஸ்ட் போல இருக்கு,அந்த சம்பவங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி காரணம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்..சார் இப்படி சச்சின் நாட்டில் நடக்குற ஒவ்வொரு விஷயத்துக்கும் அறிக்கை விட்டா அவர் அரசியல்ல இருக்காருன்னு அர்த்தம்,இப்போதைக்கு அவர் BCCIல சம்பளம் வாங்கிட்டு இருக்கார்,அவர் பொது வாழ்கையில் இல்லை.அவர் BCCI contract நிறைய விஷயங்களை தடுக்கலாம்,அறிக்கைகளையும் சேர்த்து.இப்ப குட அவர் சொன்ன அறிகையை கவனமா படிச்சு பாருங்க.


மத்திய அரசுக்கு தமிழ் மக்கள் மேல் சுத்தமா அக்கறை இல்லை அப்படின்னு இவர் சொல்றார், யோசிக்க வேண்டிய விஷயம் தான். ஆனால் இவர் அதற்காக ஒப்பிட்ட நிகழ்ச்சியை பார்ப்போம், மலேசியாவில் தமிழர்கள் தாக்கபட்ட போது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆஸ்திரேலியாவில் வட மாநிலவர்கள் தாக்கபடுவது போது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். நியாயமான ஒப்பிடா இது ? ..வேற ஒப்பிடே கிடைக்கலையா இவருக்கு. மலேசியாவில் போராட்டம் பண்ணவங்க எல்லாரும் மலேசியா குடிஉரிமை பெற்றவர்கள், போராட்டமே அங்கு சம உரிமை கேட்டு தான். இதையும் இந்திய குடிஉரிமை பெற்ற மாணவர்கள் அடித்த சம்பவத்தையும் எப்படி ஒப்பிடலாம், இப்பெல்லாம் வெளிநட்டு தமிழ் மக்களை அடித்தால், நெஞ்சம் பொறுக்குதில்லையே அப்படின்னு நாலு பதிவு எழுதிட்டு, டீ கடை பெஞ்சில் பத்து நிமிஷம் அதை பத்தி பேசிட்டு, நம்ம கடமை முடிஞ்சுதுடானு போயிட்டே இருக்காயங்க, சமீபத்தில் நடந்த பொது தேர்தல் இதற்கு ஒரு உதாரணம்.


மதங்கள் எதிரா விமர்சினம் பண்ணும் இவர், கிறிஸ்தவ நம்பிக்கை பற்றி என்ன சொல்றார், மத வல்லுனர்கள் யாருக்குமே தெரியாத ஒரு விஷயத்தை ரொம்ப எளிதா கண்டுபிடிச்சு எழுதிருக்கார், நோவா ஆறு நாளில் கப்பல் கட்டினார் ..சார் கருத்தை ஆழமா சொல்ல முயற்சி பண்ணுங்க தப்பு இல்லை, அதற்காக உங்க வசதிக்கு ஏற்ற மாதிரி 100-120 வருஷத்தை ஆறு நாலா மாற்ற குடாது. இதை விடுங்க இவர் அடுத்து கேட்ட கேள்வி...ஆப்ரிக்கா யானை, ஆசிய யானை இதில் எந்த யானை ஏறுச்சு ? டினோசார் ஏற்ற மாதிரி சொல்லவே இல்லையே ? பரபரப்பா கேள்வி கேட்டார். இந்த கேள்வி படிச்சா தூக்கி வாரி போட்டுது. ஏன்னா பொதுவா மத நம்பிக்கை இல்லாதவர்கள், அறிவியல் அதற்கு சொல்லும் காரணங்களை கேட்டு தான் விவாதிப்பார்கள். சார் இன்னும் ஆயிரம் வருடம் கழித்து அண்டார்டிகா யானை அப்படின்னு ஒன்னு தோன்றலாம், அதற்கு அறிவியலில் evolution அப்படின்னு சொல்றாங்க. அப்ப டினோசர் ? அணைத்து வாழும் உயிரினங்கள் ஒவ்வொரு ஜோடியும் ஏற்ற பட்டதுன்னு இவரே சொல்றார்..100-120 வருடம் கட்டிய கப்பலில் அந்த டினோசர் ஏற்ற இடம் இருந்திருக்கும், எதற்கு இந்த கேள்வி ? சரி பதில் திருப்தி இல்லையா. உங்க வழியிலே வரேன், ஒவ்வொரு உயிரினமும் ஒரு குடும்பத்தை சேர்ந்தது, டினோசார், பள்ளி குடும்பம். சிறுத்தை பூனை குடும்பம், ஓநாய் நாய் குடும்பம்..சோ உங்க கணக்கு படி ஆறு நாள்(பொய்)கட்டிய கப்பலில் சின்ன பள்ளி ஏறி, அப்புறம் ஆயிரம் வருடம் கழித்து டினோசார் உருவாகி இருக்கலாம்(இங்க காமெடி பண்ண முயற்சி பண்ணிருக்கேன்...மொக்கையாகவும் தோன்றலாம்).அவர் நம்பிக்கை ஏற்ற பதில் என்று நினைகிறேன்.

Wednesday, November 11, 2009

என்னத்த பண்றது ? பயணம்.

மழை எவ்வளவு அடிச்சாலும் நாங்கலாம் வீட்ல உட்கார மாட்டோம்ணு சென்னை, கோவை, பொள்ளாச்சி பக்கம் கிளம்பினேங்க, ரயில் நிலையத்தில் நின்னா, நம்ம மக்கள்ஸ் தொலைபேசில அழைத்து சச்சின் ரெகார்ட் உடைக்க போறார் அப்படி இப்படின்னு பில்டப். இதுக்கு மேல என்னத்த சொல்ல ரயில் விட்டாலும் பரவா இல்லைன்னு, ரயில் நிலையத்தில் இருந்து வெளிய வந்து ஒரு நல்ல ஹோட்டல் கஷ்டபட்டு தேடி, உள்ள போனா, நாம போன நேரம் சச்சின் வெளிய போயிட்டு இருந்தார்.

சென்னை வந்து கொஞ்சம் வீடு வேலைகள் முடிக்கிற வரைக்கும் வானிலை மந்தமாக தான் இருந்தது, சென்னைல இருக்குற நம்ம பயலுங்க ஏதோ கல்லுரி பங்க் அடிக்கிற மாதிரி, ஆபீஸ் பங்க் பண்ணிட்டு வந்துடாய்ங்க, நாம மேல அவ்வளவு பாசம் பயலுங்களுக்கு(உண்மையில் சச்சின் ஆட்டம் இழந்த சோகத்தில் அடிச்ச தண்ணி, காலைல தெளியல அவிங்களுக்கு). சரி ப்ளூபெர்ரி அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்கு, சங்கம் திரைஅரங்கு பக்கத்தில் அங்க போய் நல்ல கட்டு கட்டிட்டு, கண்டேன் காதலை(சூப்பர் படம்) அப்படின்னு ஒரு படம் போனோம்.

படம் முடிஞ்சு வெளிய வந்தா பேய் மழை, அப்படியே கோயம்பேடு கிளம்பி போய், பொள்ளாச்சி ABT பஸ் ரொம்ப தாமதமா தான் வந்தது, என்னத்த பண்றது போங்க, காலைல பொள்ளாச்சி காந்தி சிலை முன்னாடி இருக்குற ஒரு ஹோடேலில் போய் சேர்ந்தோம், நல்ல ஊருங்க இது, ரெண்டாவது முறையா இங்க வரேன்.

என்னத்த பண்றது வால்பாறை, ஆழியார் அணை, மங்கி பால்ஸ், டாப் ஸ்லிப், பரம்பிகுளம் காடு, இப்படி பல பிளான் இருந்தாலும், ஹோட்டல், பஸ் டிக்கெட் இதெல்லாம் புக் பண்ணவன் கல்யாணமும் போனும்ல, அதனால கொஞ்சம் யோசிச்சு பார்த்து கிளம்புனா, சென்னைல எங்களை துரத்துன மழை, இங்கயும் விடலை, நாங்க பரவா இல்லை சரியா சில இடங்கள் பார்த்துட்டு விஷேசத்துக்கு வந்துடோம், இன்னொரு கும்பல் ரொம்ப கஷ்டப்பட்டு நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போய் எங்களையும் கவலை படித்துடாங்க.

ஞாயிற்று கிழமை, மழை பயத்துல எங்கயும் போல(சுத்தமா மழை பெய்யல, என்னத்த பண்றது), நான் மட்டும் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு திருசபைக்கு(சர்ச்) போய் வந்தேன். அப்புறம் மதியம் "எந்த ஊரு போனாலும் அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும்னு" 'காக்க காக்க' வில்லன் மாதிரி அப்படியே சுத்தி ரவுசு பண்ணிட்டு இருந்தோம். அப்பாலிக்க சாந்திரம், கோவை கிழம்பி வந்தா, என்னத்த சொல்ல, அன்னிக்கு முழுவதும் எங்களை விட்டு வைத்த மழை, கோவையில் எங்களுக்காக வெயிட் பன்னிருக்கு. அப்புறம் கோவையிலிருந்து ஒன்னும் பிரச்சினை இல்லாம வீடு வந்து சேர்ந்தேன்.

எங்க ஊரு வைகை ஆற்றில் தண்ணி ஓடுதாம், பார்க்க ஆசையா தான் இருக்கு, என்னத்த பண்றது, மறுபடியும் கிறிஸ்துமஸ் அப்ப போறதா தான் ப்ளான்.

Thursday, November 5, 2009

பிடித்தது ? தமிழ் பிரதம மந்திரி.

1.அரசியல் தலைவர்

பிடித்தவர் :சிதம்பரம் - ஒரு தமிழரான இவர் என்னிக்காவது பிரதமர் ஆவார்னு ஒரு நப்பாசையும் இருக்கு.
பிடிக்காதவர்: வை.கோ - "தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் !!! "

2.எழுத்தாளர்

பிடித்தவர் : கருணாநிதி - இவருடைய எழுத்துக்கள் (மட்டும்) உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.
பிடிக்காதவர் : துக்ளக் சோ - ஒண்ணுமே புரியாது இவருடைய பத்திரிகை, வீட்டில் அப்பா வாங்கி வச்சு வெறுப்பு ஏத்துவார்.

3.இயக்குனர்

பிடித்தவர் : மணிரத்னம் - இவர் படத்தில் நிறைய அரசியல் இருக்கும்.
பிடிக்காதவர்: சீமான் - இவர் படத்திற்கு வெளியே நிறைய அரசியல் பண்ணுவார்.


4.நடிகர்

பிடித்தவர் : சூர்யா - இவர் படம் திரையருங்கு போனா, உங்களை சுற்றி பிகர்ஸ் அமர்வது உறுதி. ...ஹீ.. ஹீ....சும்மாங்காட்டி சொன்னேன். உண்மையில் நல்ல நடிகர்.
பிடிக்காதவர் : விஜய் - இவரை சிலர் ரஜினி இணையாக பேசுகிறார்கள், அந்த காரணத்துக்காக... என்னிக்கும் தலைவர் ஒருவர் தானே ?

5 . இசையமைப்பாளர்

பிடித்தவர் : ஹாரிஸ் ஜெயராஜ்...நிறைய கிட்டார் ஒழி இருக்கும் (அமெரிக்காவில் இவர் அலுவலகம் வைக்காததும் ஒரு காரணம்)
பிடிக்காதவர் : தேவா ..இவரை சாப்ட்வேர் பசங்களுக்கு இணையா ஒருவர் எழுதிட்டார்..காப்பி பேஸ்ட் பண்ணி, எங்க மானத்தையும் வாங்குகிறார்.

6. விளையாட்டு வீரர்

பிடித்தவர் : முரளி விஜய், இவர் முதல் ஆட்டத்தில் முக்கியமான சமயத்தில் பன்ன ரன் அவுட் பாருங்க, உங்களுக்கும் பிடிக்கலாம்.
பிடிக்காதவர் : வி.ஆனந்த், இந்தியாவை விட ஸ்பெயின் இவருக்கு பிடித்திருக்கு, இவர் ஸ்பெயின் குடி பெயர்ந்து ரொம்ப வருஷங்கள் ஆயிடிச்சு.

7. பதிவர்

பிடித்தவர் : நிறைய பேர் இருக்காங்க. குறிப்பா மணி, பீர்
பிடிக்காதவர் : கோவி... எனக்கு பிடித்த எல்லாரையும் இவர் ரொம்பவே திட்டுவாருங்க....கிர்ர்ர்.
(குறிப்பு ... மணி,பீர், கோவி கவனிக்கவும், உங்களுக்காக முதல் விதிமுறை மீறி இருக்கேன்.விதிமுறை ஒன்றை படிக்கவும்)


இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது

ஜெகதீஷ்
பிரபா
கனகு
தங்கராஜ்

விதிமுறை..

1 . பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்.
2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் (தற்போதைய) இருக்க வேண்டும்.
4. காரணம் தேவையில்லை, விருப்பம் உள்ளவர்கள் சொல்லலாம்.

என்னை இந்த தொடருக்கு அழைத்த பீர் முகமத் அவர்களுக்கு நன்றி.

Tuesday, November 3, 2009

பத்திரிகை தர்மம்

பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு அரசியல், அரசியல் கட்சிகள் பற்றிய ஒரு அபிப்ராயம் எப்படிங்க வருது, தினசரி செய்தி தாள்கள் மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும் தான், நீங்கள் அரசியல் விமர்சனம் வெறும் செய்தி தாள்களை பார்த்து மட்டும் பன்னுபவராக இருந்தால், நீங்கள் நல்லாவே ஏமாற்ற பட்டு இருக்கீர்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சில முன்னணி செய்தி தாள்கள், 350-400 கோடி பணம் சம்பாதித்து இருக்கார்கள், பணம் குடுக்கும் வேட்பாளர்களை பற்றி நல்ல தலையங்கம், செய்திகள் அவர்கள் சார்பாக போட்டும் இருக்கார்கள், பணம் குடுக்க முடியாத வேட்பாளர்கள், செய்திகளில் முற்றிலும் புறக்கணிக்க பட்டும் இருக்கார்கள். இதெல்லாம் செய்திதாளில் வரும் விளம்பரம் பத்தி நான் சொல்லலைங்க, நாம நம்பி படிக்கும் செய்திகளில் இவ்வளவு வியாபாரம் நடந்து இருக்கு.

ஆனா ஊனா...பத்திரிகை சுதந்திரம், அப்படின்னு போராட்டம் பண்ணும் பத்திரிகைகள், முக்கியமான தேர்தல் சமயத்தில் ரொம்ப சுதந்திரமாவே பணத்தை வாங்கிட்டு, ஜனநாயகத்துக்கு துரோகம் பண்ணியும் இருக்கார்கள். பொதுவாக "அரசியல் தர்மம்", "கூட்டணி தர்மம்" அப்படின்னு சொல்லி அரசியல் கட்சிகளை கிழித்து எடுக்கும் இவர்கள்...."பத்திரிகை தர்மம்" என்பதை மறந்தது ஏனோ. இந்த ஒரு சம்பவத்தை வைத்து எல்லா பத்திரிகைகளையும் குறை சொல்லலைங்க, சில நிருபர்கள் உண்மையை மக்களுக்கும், உலகத்துக்கும் சொல்லணும் என்ற ஒரே காரணத்துக்காக உயிரையும் விட்டு இருக்கார்கள், இல்லைன்னு சொல்லலை.

சரி, இப்ப தமிழ் பத்திரிகைகளுக்கு இதில் சம்பந்தம் உண்டா ? எந்த அரசியல் கட்சி இதில் நிறைய செலவு செய்தார்கள், எந்த எந்த பத்திரிகைகள் பணம் வாங்கினார்கள், என்று இன்னும் சரியா தெரியலைங்க. தமிழ் செய்தி தாள்களில் இதை பற்றின செய்தி வந்துதான்னு கூட தெரியலை, இந்த விஷயத்தை expose பண்ணது ஹிந்து செய்தி தாள். பல வருஷங்களாக ஹிந்து மட்டுமே படித்து வருகிறேன், வலையுலகத்தில் தினமலர் செய்தி படித்தும் வந்தேன், நடிகை பிரச்சினைக்கு அப்புறம் தினமணியும் சேர்த்து படிப்பது உண்டு. ஹிந்து செய்தி படி இந்த சம்பவம் ஆந்த்ராவிலும், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்ததாக எழுதி இருக்கார்கள். இதை பற்றி இன்னும் விவரம் தெரிந்தவர்கள் தகவல் பகரவும். ( நன்றி ஹிந்து)

ஓகே இப்ப நாம கேள்வி பகுதிக்கு செல்லுவோம்.
கடந்த முறை கேட்ட கேள்வியின் பதில் .....மாதவன் நாயர், முன்னாள் இஸ்ரோ தலைவர், தற்போதைய தலைவரும் ஒரு மலையாளி தான், டாக்டர் ராதாகிருஷ்ணன்.

இந்த வார கேள்வி, இந்த படத்தில் இருப்பவர் யார்.திருக்குறள் பகுதி

அப்பைக்கு அப்ப சும்மாங்காட்டி, ஒரு திருக்குறளும் எழுதலாம்னு இருக்கேன்.கூகிளில் "தர்மம் வெல்லும் + திருக்குறள்" அப்படின்னு போட்டு ஒரு தட்டு தட்டி  வந்த திருக்குறள்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்"