Monday, February 1, 2010

ஆஸ்திரேலியா இனவாதம்

சென்ற வருடம் மே-ஜூன் மாதம் இருக்கும், பொது தேர்தல் முடிந்து எல்லா ஆராவாரங்களும் அடங்கி இருந்த சமயம், ஊடகங்கள் தலைப்பு செய்திகள் ஒன்னும் ஓடாமல் இருந்தன, அப்ப தான் ஆஸ்திரேலியாவில், இந்தியர்கள் தாக்குதல் பிரச்சினை ஆரம்பித்தது, ஊடகங்கள் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் ஓவர்-டிரைவில் பிரச்னையை போட்டு காமிக்க தொடங்கினார்கள், காலையில் எழுந்து செய்திகள் போட்டால்  முதலில் பார்க்கும் வீடியோ, இந்திய மாணவர் வயிற்றில் பத்து-பதினைந்து தையல் இருக்கும், இல்லைனா முகம் பூரா ரத்த கட்டியோட வீங்கி போகிருக்கும். ஆங்காங்கே இந்த தாக்குதலை கண்டித்து மாணவர்களும், கட்சிகளும் கண்டன ஊர்வலம் செய்து கொண்டு இருந்தார்கள்(சென்னையிலும் கூட) . அப்போதைய சூழலில் அதை பற்றி கொஞ்சம் நெகடிவ் விமர்சினம் பண்ணி , அதில் தேவையில்லாமல் ஒட்டு மொத்த வெளிநாட்டுவாழ் இந்தியர்களையும் தாக்கி   ஒரு பதிவு எழுதிவிட்டேன்.

சக தமிழ் பதிவர்கள், ட்விட்டர்கள்  இந்த விஷயம் பற்றி பேசினால் அடிக்கடி  மீனவர் பிரச்சினை, தலித் பிரச்சினை, ஆதிவாசிகள் பிரச்சினை, மலேசியா தமிழர் பிரச்சினை....இப்படி பல இனவாதம் பிரச்சினைகளை கூறி, அதற்கலாம் முதலில் கவலைபடுங்கள் பிறகு நாம ஆஸ்திரேலியாவில் இருப்பவர்களை பற்றி யோசிக்கலாம் என்று சொல்லுவார்கள்...ஆரம்பத்தில் இவர்கள் சொல்லுவதில் விஷயம் இருப்பதாக தோன்றினாலும், சற்று உன்னிப்பாக கவனித்தால்  இவர்கள் வட நாட்டவர்கள் மீது இருக்கும் ஒரு வெறுப்பினாலே இப்படி சொல்லுகிறார்கள் என்றும்  தோன்றியது. வட நாடு-தென் நாடு பிரிவினை இதில் தான் நிருபிக்கனுமா. ஒரு கல்லூரிக்குள் எவ்வளவு உள் சண்டை போட்டாலும், கல்லூரி வேற்றார் பிரச்சினை பண்ணால் ஒன்றாக சேர மாட்டோமா (கொஞ்சம் கடியான ஒப்பிடு தான், வேற ஒன்னும் தோணலை).

சரி இப்ப பத்து மாதங்கள் மேல ஆகியும் தாக்குதல் நிற்கும் மாதிரி தெரியவில்லை, நிலைமை இன்னும் மோசம் ஆகி விட்டது, ரெண்டு மூன்று கொலைகளும்  நடந்தேறி விட்டன. அங்கு இருக்கும் இந்திய குடிஉரிமை உள்ள மக்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கு.மக்களே !!  "எந்த ஊரு போனாலும் அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும்னு" காக்க காக்க வில்லன் சொல்லுவார், அதெல்லாம் ஆஸ்திரேலியாவில் பண்ண முடியாது போல இருக்கு, தயவு செய்து திரும்பி வந்து விடுங்கள், நம்ம நாடும் ஒரு அளவுக்கு முன்னேறி தான் இருக்கு.

 இப்போது இந்த தாக்குதலுக்கு ஒரு சில காரணங்களை  பார்க்கலாம். (இது ஒரு ஆங்கில வார இதழில் படித்தது )

  1. இந்திய வம்ச வாழ் மக்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லையாம், ஒரு சீனா காரனை அடித்தால், எல்லா சீனா காரனும் ஒன்றாக சேர்ந்து எதிர் தாக்குதல்  பண்ணுவாங்களாம், அவர்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்குமாம். ஆனால் இந்தியா காரன் அடிச்சா முதல்ல மீடியாவிடம் தான் செல்கிறார்களாம். இந்திய குழுமங்களில் ஒரு நாலு பிரிவினை இருப்பதாக சொல்கிறார்கள், இதில் பணக்காரர்கள் ரொம்ப வசதியாக இருப்பவர்கள், இன்றும் இனவாத தாக்குதல் ஒன்றும் இல்லை என்றே அடம் பிடிக்கிறார்கள், இவர்கள் பெரும்பாலும் வசதியான சொந்த வண்டியில் போவதாலும், பணக்கார இடங்களில் வாழ்வதாலும், இவர்களுக்கு பிரச்சினை இல்லை. பொதுவாக தாக்குதல் இரவு நேரத்தில், பொது போக்குவரத்தில், தனிமையான இடங்களில் நடப்பது அறிந்திருக்கலாம்...அவ்வாறன இடத்திற்கு இந்த பணக்கார இந்தியர்கள் போவதே கிடையாதாம் (divisions in community).

  2. இந்திய மாணவர்கள் எப்போதும் கையில் லேப்டாப், ஐ-போட், நிறைய பணத்தோட தான் அலைவார்கலாம், இதனால் அவர்கள் மேல ஆன தாக்குதல் இனவாத தாக்குதல் என்று சொல்வதை விட, வழிப்பறி கொள்ளைகள் ஆக கூட இருக்கலாம். நம்ம ஊர் காரைங்க, எல்லாரும் சேர்ந்து ஷேரிங் ரூமில் தங்குவதால்,  அவர்கள் ரூமில் இந்த சாமான்களை வைப்பதை விட, அவர்கள் கைகளில் எடுத்து செல்வது தான் வசதியாக இருப்பதாலும் , வங்கிகளில் பணத்தை வைப்பதும் நிறைய போர்மளிட்டி இருப்பதால், அவர்கள் பணத்தை எப்போதும் கைகளில் கொண்டு செல்கிறார்கள். (soft targets)

  3. ஒரு ஆஸ்திரேலியன், காலையில் இருந்து இரவு வரை, அவன் போகும் எல்லா இடத்திலும் ஒரு இந்தியன் பார்க்கும் ஒரு சூழல் உருவாகி விட்டது. பொது போக்குவரத்திலோ, பெட்ரோல் நிலையத்திலோ, சாப்பாடு பரிமாறும் இடத்திலோ, டாக்ஸி பயனித்தாலோ...எங்கே சென்றாலும் ஒரு இந்தியன் வேளையில் இருப்பதால், முக்கியமாக இந்த பொருளாதார மந்த சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட ஆஸ்திரேலியா வர்க்கத்தை ரொம்பவும் பாதித்து விட்டதாக சொல்கிறார்கள். அதனாலேயும் இந்த தாக்குதல் இருக்கலாம்.

மொத்தத்தில் எப்படி பார்த்தாலும் ஆஸ்திரேலியா இனவாதம் இருக்கும் ஒரு நாடாகவே தோன்றுகிறது, சீக்கிரமாக அங்கு உள்ள இந்திய வாழ் மக்களுக்கு இந்த பிரச்சினையில் இருந்து ஒரு தீர்வு கிடைக்கணும் என்று எதிர்பார்ப்போம். நன்றி.

.