Tuesday, November 3, 2009

பத்திரிகை தர்மம்

பெரும்பாலும் சாமானிய மக்களுக்கு அரசியல், அரசியல் கட்சிகள் பற்றிய ஒரு அபிப்ராயம் எப்படிங்க வருது, தினசரி செய்தி தாள்கள் மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும் தான், நீங்கள் அரசியல் விமர்சனம் வெறும் செய்தி தாள்களை பார்த்து மட்டும் பன்னுபவராக இருந்தால், நீங்கள் நல்லாவே ஏமாற்ற பட்டு இருக்கீர்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சில முன்னணி செய்தி தாள்கள், 350-400 கோடி பணம் சம்பாதித்து இருக்கார்கள், பணம் குடுக்கும் வேட்பாளர்களை பற்றி நல்ல தலையங்கம், செய்திகள் அவர்கள் சார்பாக போட்டும் இருக்கார்கள், பணம் குடுக்க முடியாத வேட்பாளர்கள், செய்திகளில் முற்றிலும் புறக்கணிக்க பட்டும் இருக்கார்கள். இதெல்லாம் செய்திதாளில் வரும் விளம்பரம் பத்தி நான் சொல்லலைங்க, நாம நம்பி படிக்கும் செய்திகளில் இவ்வளவு வியாபாரம் நடந்து இருக்கு.

ஆனா ஊனா...பத்திரிகை சுதந்திரம், அப்படின்னு போராட்டம் பண்ணும் பத்திரிகைகள், முக்கியமான தேர்தல் சமயத்தில் ரொம்ப சுதந்திரமாவே பணத்தை வாங்கிட்டு, ஜனநாயகத்துக்கு துரோகம் பண்ணியும் இருக்கார்கள். பொதுவாக "அரசியல் தர்மம்", "கூட்டணி தர்மம்" அப்படின்னு சொல்லி அரசியல் கட்சிகளை கிழித்து எடுக்கும் இவர்கள்...."பத்திரிகை தர்மம்" என்பதை மறந்தது ஏனோ. இந்த ஒரு சம்பவத்தை வைத்து எல்லா பத்திரிகைகளையும் குறை சொல்லலைங்க, சில நிருபர்கள் உண்மையை மக்களுக்கும், உலகத்துக்கும் சொல்லணும் என்ற ஒரே காரணத்துக்காக உயிரையும் விட்டு இருக்கார்கள், இல்லைன்னு சொல்லலை.

சரி, இப்ப தமிழ் பத்திரிகைகளுக்கு இதில் சம்பந்தம் உண்டா ? எந்த அரசியல் கட்சி இதில் நிறைய செலவு செய்தார்கள், எந்த எந்த பத்திரிகைகள் பணம் வாங்கினார்கள், என்று இன்னும் சரியா தெரியலைங்க. தமிழ் செய்தி தாள்களில் இதை பற்றின செய்தி வந்துதான்னு கூட தெரியலை, இந்த விஷயத்தை expose பண்ணது ஹிந்து செய்தி தாள். பல வருஷங்களாக ஹிந்து மட்டுமே படித்து வருகிறேன், வலையுலகத்தில் தினமலர் செய்தி படித்தும் வந்தேன், நடிகை பிரச்சினைக்கு அப்புறம் தினமணியும் சேர்த்து படிப்பது உண்டு. ஹிந்து செய்தி படி இந்த சம்பவம் ஆந்த்ராவிலும், மகாராஷ்டிரா மாநிலங்களில் நடந்ததாக எழுதி இருக்கார்கள். இதை பற்றி இன்னும் விவரம் தெரிந்தவர்கள் தகவல் பகரவும். ( நன்றி ஹிந்து)

ஓகே இப்ப நாம கேள்வி பகுதிக்கு செல்லுவோம்.
கடந்த முறை கேட்ட கேள்வியின் பதில் .....மாதவன் நாயர், முன்னாள் இஸ்ரோ தலைவர், தற்போதைய தலைவரும் ஒரு மலையாளி தான், டாக்டர் ராதாகிருஷ்ணன்.

இந்த வார கேள்வி, இந்த படத்தில் இருப்பவர் யார்.திருக்குறள் பகுதி

அப்பைக்கு அப்ப சும்மாங்காட்டி, ஒரு திருக்குறளும் எழுதலாம்னு இருக்கேன்.கூகிளில் "தர்மம் வெல்லும் + திருக்குறள்" அப்படின்னு போட்டு ஒரு தட்டு தட்டி  வந்த திருக்குறள்

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்"

8 comments:

kanagu said...

pathrikkai la vara ellathayum unmai nu nambuna nammala vida muttal yaarume irukka maatanga...

athe maathiri Hindu pathirikai melayum China sambandhama vishayangalil sila kutrachatukkal irukku...

enakku bloggers yaarum arasiyal ah thevirama unmaiyoda ezhutha maatingruangale apdingrathula varutham irukku... :(

Dinamani mattum naan padippen... athil varum thalaiyangam arumaiyaaga irukkum... konjam avanga DMK, congress ku ethiraaga irpathu pola thondrinaalum oru tharam irukkum... thevaiyatra seithikal irukkathu...

photo va paatha ellam aala kandupudikra alavukku enaku knowledge illa thala.. :(

thirukkural inaipu nalla muyarchi :)

கிருஷ்ணமூர்த்தி said...

நிருபமா ராவ் என்பதைப் பத்திரிகைகளைத் தொடர்ந்து படிப்பவர்கள் சொல்லிவிடுவார்களே!

என்ன விவரம் என்பதை ஹிந்து நாளிதழில் முப்பதாம் தேதியும், அதற்கு முன் இருபத்தாறாம் தேதியன்று சாய்நாத் கட்டுரையிலும் தெளிவாகத் தானே சொல்லியிருக்கிறார்கள்!

Indian said...

//இந்த வார கேள்வி, இந்த படத்தில் இருப்பவர் யார்//

External affairs secretary Nirupama Rao.

மணிகண்டன் said...

திருக்குறள் பகுதி நல்ல முயற்சி. இதுபோன்று வாரா வாரம் நீங்கள் முயற்சி செய்யலாம். அதனுடம் உரையும் சேர்த்து எழுதினால் நல்ல பயனாக இருக்கும். இக்குறள் எளிதில் புரிந்ததால் தேவையில்லை.

மணிகண்டன் said...

அந்த படத்தில் உள்ளவர் அனுபமா காதேள்ககர்.

Sammy said...

நன்றி கிருஷ்ணமுர்த்தி சார்.

உங்களுக்கு ரொம்ப எளிதான கேள்வியா போயிடுச்சு. சரி. இன்னும் சரியா எந்த பத்திரிகை குழு இந்த வியாபாரம் பண்ணாங்கனு தெரியலை, நான் சரியா படிக்காமலும் விட்டுருக்கலாம்.

நன்றி இந்தியன்,
அவர் இந்திய வெளியுறவுத்துறை செயலர் தான், வருகைக்கு நன்றி

Sammy said...

நன்றி கனகு,

தமிழ் அரசியல் விமர்சினம், பதிவர்கள் அதிகம் பண்ணுகிறார்கள். உங்களையும் சேர்த்து, நிறைய ரத்த ஆறு ஓடுற பூமி அது.


நன்றி மணி,

//அனுபமா காதேள்ககர்.//
இப்படி தான் கேள்வி கேட்டவனையும் குழப்புவாங்களா.சரி. எளிதில் புரிய குடிய குறள் மட்டும் போடுறேங்க. என்னுடைய எழுத்து பிழை பிரச்சினை தீர்க்க உதவும்னு நினைக்கிறேன்.

பீர் | Peer said...

வாங்க சாம், உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.

பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்