Tuesday, October 27, 2009

தனக்கு மிஞ்சியது...

இந்தியாவில் இருக்கும் பணக்கார வர்கங்களையும், தொழிலதிபர்களையும் , மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்களையும் ஒப்பிட்டு பார்த்தால், இந்தியர்கள் தானம், நிதி உதவி,சமுதாய அக்கறை,சமுதாய முன்னேற்றம். இந்த மாதிரி சமாசாரங்களில் இன்னும் நிறைய பண்ணலாம் அப்படின்ற ஒரு பொதுவான எண்ணம் இருக்காம். சமீபத்தில் சுனில் மிட்டல் நேர்காணல் ஒன்றில் இதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர் சொல்லும் காரணம்.

இந்தியர்கள் குடும்ப அமைப்பும்,கலாசாரமும் இதற்கு முக்கிய காரணம் என்று அவர் சொல்றாருங்க, அதாவது மேற்கத்திய நாடுகளில், பதினெட்டு வயசு ஆனவுடன் பையனயோ, மகளையோ வீட்ட விட்டே துரத்தி விடுவாங்களாம் (உண்மையாங்க ?). அதுக்கு மேல அவர்களை பத்திய ஒரு கவலை சுத்தமா இருக்காதாம். ஆனால் நம்முடைய நாட்டில் சாகும் வரை அப்பா அம்மா கூட தான் நிறைய பேர் இருக்க விரும்பறோம், நாலு, ஐந்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கிறோம்,அப்ப தான் கொஞ்சம் சந்தோசமா மூச்சை விட முடியுது.

"தனக்கு மிஞ்சியது தான் தானம்" அப்படின்னு சொல்றாங்க, இதில் தனக்கு என்பது, தான், தன்னுடைய மகன், பேரபிள்ளை, அம்மா,அப்பா...அப்படின்னு ஒரு பெரிய வட்டாரம் வந்திருதுங்க, இதனாலேயே. நமக்கு இந்த மாதிரி விஷயங்கள் அதிகம் செய்ய யோசிக்கிறோம்.

ஆங்கிலத்தில் ஒன்னு சொல்வாங்க 'charity starts at home' இது சொல்லப்பட்ட அர்த்தம் சரியாய் தெரியலை, ஆனால் நான் என்ன நினைக்கிறன் அப்படினா, நீங்கள் அநாதை இல்லம், முதியோர் இல்லம் அப்படின்னு தேடி பொய் உதவி பண்ணனும் அப்படின்னு அவசியம் இல்லைங்க, உங்கள் வீட்டில் சந்திக்கும் மக்களிடையே உதவி பண்ணலாம், உதாரணத்துக்கு வீட்டில் வேலைபார்க்கும் வேலைகாரர்கள்,காவலர்கள்,காய்கறி விற்பவர்கள் அவர்கள் மருத்துவ செலவு, பிள்ளைகள் படிப்பு செலவு, இப்படி நாம தினம் தினம் சந்திக்கும் மக்களுக்கே உதவி பண்ண பழகலாம். சில விவசாய மக்களை பற்றி நான் கேள்வி பட்ட விஷயத்தயும் எழுதிடுறேன், அவர்கள் அறுவடை பண்ணும் போது, அந்த அறுவடை சிலவற்றை வேணும்னே விட்டு வைப்பாங்கலாம், ஏழை மக்கள்,கஷ்டபடுறவர்கள் எடுத்துகிரதுக்காக.

என்னங்க நிறைய அறிவுரை பண்றேனா, என்னங்க பண்றது நமக்கு ரொம்ப எளிதா வரது ரெண்டு விஷயம்ங்க, ஒன்னு கேள்வி கேட்கறது, இன்னொன்னு அறிவுரை பண்றது,

சரி முடிக்கிறதுகு முன்னாடி இன்னும் ரெண்டு விஷயம் சொல்லிடுறேன்.

"வலது கையில் பண்றது இடது கைக்கே தெரிய கூடாது"
இதன் அர்த்தம், நாம பண்ணும் இந்த மாதிரி உதவிகள், விளம்பரத்துகாகவோ, விளம்பரப்டுத்தவோ கூடாது.
"ஏழைக்கு இரங்குகிறவன் கடவுளுக்கு கடன் கொடுக்கிறான்"
இந்த ரெண்டு வாக்கியங்களும் பைபிளில் வரும் முக்கியமான வசனம்ங்க.

9 comments:

Jegu said...

/*பதினெட்டு வயசு ஆனவுடன் பையனயோ, மகளையோ வீட்ட விட்டே துரத்தி விடுவாங்களாம் */

இல்லை, அவர்களாகவே வீட்டை விட்டு வெளியே சென்று தன் விருப்பத்திற்கு விரும்பிய செயலில் ஈடுபடுவார்கள்!

இந்திய குடும்ப அமைப்பு நன்மையானது அதை ஒழுங்கா கடைப்பிடிக்கும் போது, அவனவன் அவனது தாய், தந்தையை பார்த்துகொன்டால் முதியோர் இல்லம் எதற்கு ???

இது போல் நிறைய விசயங்கள் இருக்கு....

பீர் | Peer said...

அறிவுரை சொல்ல வான்னு கூப்பிட்டு இப்டி வெளுத்து வாங்குறீங்களே.... நைஸ்.

kanagu said...

nalla vishayangal Sammy... romba nalla irundhudu...

aana naamalun western culture ku maarura kaalam romba thoorathula illa... athe maari nammaloda kudumba amaipulayum miga periya thavarukal irukku...

namma kudumba amaippu padi ponnungaloda parents ah paathuka vazhiye illa... aana matha vishayatha pathi vaai kizhiya paesuravanga idha pathi pesuradhu illa :(

Sammy said...

jegu, நல்ல கருத்து, நன்றி.

நன்றி பீர்,

kanagu, சரியா சொன்னீங்க. கருத்திற்கு நன்றி.

மணிகண்டன் said...

ஒரே பக்கத்தில் கமெண்ட்டும் இருந்தால், அலுவலகத்தில் ப்ளாக். அதுனால உங்கள் தமிழ் பதிவுக்கு வீட்டுக்கு வந்து தான் எழுத வேண்டி இருக்கு.

charity starts at home.
அதுக்கு அர்த்தம் நம்பகிட்டேந்து ஆரம்பிக்கனும்ன்னு நினைக்கறேன் :)-

thenammailakshmanan said...

charity starts at home

nice words sammy

thanks for ur comments too

அன்புடன் மலிக்கா said...

நல்ல அறிவுறைகள். வாழ்த்துக்கள்..

Sammy said...

மணி ...சரியான அர்த்தம் சொன்னதற்கு நன்றி.

வருகைக்கு நன்றி thenammai.

நன்றி அன்புடன் மலிக்கா.

kanagu said...

NREGA தமிழகத்தில் எப்படி உள்ளது என்பதை பாருங்கள் சாமி:

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=138895&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=