Wednesday, January 20, 2010

வீர, தீர விருது ...விளையாட்டு

சிறுவர்களுக்கான வீர செயல்கள் விருது இந்திய அரசால் (indian council for child welfare) அறிவிக்க பட்டு இருக்கிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து 21 பேர் விருது பெற போகிறார்கள்.

க்ஹுமந்தேம், எட்டு வயது மணிப்புரி சிறுமி இவர், நான்கு வயது சிறுவன் ஒருவன் குளத்தில் விழுந்த போது, நீச்சல் தெரியாத இவர் குதித்து காப்பாற்றி இருக்கார். இவருடைய தாயார் ஒரு மருத்துவர், இவருக்கும் மருத்துவர் ஆகனும் என்று ஆசை இருக்காம். கௌரவ் சிங்க், 13 வயது சிறுவன். ஐம்பது பேரை காப்பாற்றி இருக்காராம், பிரிட்டி தேவி 10 வயது சிறுமி அவர்களுடைய கடையில் வீசிய கை வெடிகுண்டை (grenade) சரியான சமயத்தில் அப்புறபடுத்தி, பல பேர் உயிரை காப்பாற்றி இருக்கார். இதை பற்றி செய்திகள் இங்கே.
 
நமக்கு இந்த வீர தீர செயல்கள் பன்னும் அளவிற்கு தைரியம் இருக்கானு தெரியலை, ஆனா இந்த வீர விளையாட்டில் நிறைய ஆர்வம் இருக்கு, ஒரு மாசம் முன்னதாகவே பயிற்சி ஆரம்பிச்சுட்டேன், இந்த வருடம் எங்க ஊரில் நடக்கும் மஞ்சுவிரட்டில் (ஜல்லிக்கட்டு) பங்கு கொள்வதற்கு, இதில் நண்பர்கள் சிலரையும் உசுப்பு ஏத்தி விட்டாச்சு. ஆனா சரியா பாருங்க பொங்கல் சமயத்தில் ஊருக்கு போகும் வாய்ப்பு கிடைக்க வில்லை. போகாததும் நல்லது தான் போல இருக்கு, இந்த வருடம் பார்வையாளர் கும்பலில் வேடிக்கை பார்த்த ஒருவரை தூக்கி வீசிருக்கு....முரட்டு காளை.

இந்த விருதுகள் என்றவுடன் மற்றொரு முக்கியமான விஷயமும் ஞாபகம் வருது, தமிழ்மணம் (blog aggregator), சிறந்த பதிவிற்கான போட்டி ஒன்று நடத்தியது, இந்த மாதிரி போட்டியில் பங்கு கொள்வதற்கு நமக்கு சுத்தமா அருகதை இல்லிங்கோ, நாம எழுதும் தமிழ் அந்த லட்சணத்தில் உள்ளது..என்னத்த பண்ண போங்க. சரி அதை விடுங்க ..இப்போ நாம முக்கியமான கடமை என்ன ? இந்த போட்டியில் பங்கு கொண்டவர்களையும், அதில் வெற்றி பெற்றவர்களையும் பாராட்டுவது தான் வேற என்ன ....(கை தட்டு சத்தம்). நான் தொடர்ந்து படிக்கும் சில பதிவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள், மகிழ்ச்சி. அதில் சிலர்..

ப்ருனோ -- இவர் 'மருத்துவரா'  இல்லை 'எழுத்தாளரா' அப்படின்னு ஒரு பெரிய குழப்பம் இருக்குங்க எனக்கு, வருடா வருடம் இவர் பாட்டுக்கு எல்லா பரிசையும் தட்டி செல்கிறார்.

கோவியர்- சிங்கப்பூர் கோவி.., பலராலும் மதிக்கபடும் மூத்த பதிவர், இவர் எழுதும் கருத்துகளுடன் இது வரை ஒத்து போனதாக எனக்கு ஞாபகம் இல்லை, இதினால் சில சமயம் இவரை சங்கட படுத்தியதும் உண்டு.

பீர் -- எங்க ஊர் காரர், இன்னும் இவரை சந்தித்ததில்லை, இவரையும் ஜல்லிக்கட்டு கூட்டிட்டு போறதாக உசுப்பு ஏத்தி இருந்தேன். இவர் பதிவு கார சார சண்டைகள் நடக்கும் ஒரு போர்க்களம்.

இப்ப நாம திருக்குறள் பகுதிக்கு செல்லலாம்.

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்,
நன்மை கடலின் பெரிது.
 
விரிவுரை : தனக்கு இன்ன பயன் தரும் எனக் கருதாது செய்த உதவியின் நற்பயனின் பண்பை ஆராய்ந்து நோக்கின், அதன் நன்மை கடலைக் காட்டிலும் பெரிது.

.

4 comments:

கோவி.கண்ணன் said...

//கோவியர்- சிங்கப்பூர் கோவி.., பலராலும் மதிக்கபடும் மூத்த பதிவர், இவர் எழுதும் கருத்துகளுடன் இது வரை ஒத்து போனதாக எனக்கு ஞாபகம் இல்லை, இதினால் சில சமயம் இவரை சங்கட படுத்தியதும் உண்டு.//

எல்லாவற்றிலும் ஒத்தக் கருத்து உள்ளவர்கள் கிடைப்பது கடினம். மலர் தோட்டங்கள் ஒரே மலரால் இருந்தால் சிறப்பாக இருக்காது இல்லையா ? ஒத்தக் கருத்து என்பதற்கு பதில் மாற்றுக் கருத்து உடையவர் என்று கொள்ளலாம் இல்லையா ? நானும் அவதூறுகளை எழுதுவதில்லை என்று நினைக்கிறேன். அப்படியே தெரிந்தாலும் கூட அது என் சொந்தக்கருத்து இல்லை, எங்காவது படித்ததைச் சொல்லி இருப்பேன்.

குறிப்பிட்டு எழுதியருப்பதற்கு நன்றி சாமியோவ் !

Sammy said...

நன்றி கோவி .

புருனோ Bruno said...

//ப்ருனோ -- இவர் 'மருத்துவரா' இல்லை 'எழுத்தாளரா' அப்படின்னு ஒரு பெரிய குழப்பம் இருக்குங்க எனக்கு, வருடா வருடம் இவர் பாட்டுக்கு எல்லா பரிசையும் தட்டி செல்கிறார்.
//

ஏன் சார் மருத்துவர் எழுத்தாளர் ஆக இருக்க கூடாதா

இலட்சுமி
மைக்கேல் க்ரைட்டன்
ஆர்தர் கானன் டாயில்

எல்லாம் மருத்துவர்கள் தானே

Sammy said...

நன்றி ப்ருனோ..
எப்படி கூப்பிடிறது என்ற குழப்பம் வேற ஒன்னும் இல்லை.