Wednesday, January 27, 2010

Sammy = சாமுவேல் | Samuel

ஆரம்பத்தில் பதிவர் ஒருவர் அவருடைய பதிவில் எனக்கு மறுமொழி எழுதும் போது 'சாமி' என்று அழைத்து பதில் எழுதினார், சரி 'sammy' என்ற ஆங்கில சொல்லை தவறுதலாக 'சாமி' என்று எழுதிட்டார் போல இருக்கு அப்படின்னு நினைச்சேன், ஆனா தொடர்ந்து நான் பின்னூட்டம் இடும் எல்லாருடைய பதிவுகளிலும் என்னை 'சாமி' என்றே பதிவர்கள் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஓரளவுக்கு பக்தி உள்ள வாழ்க்கை வாழ்ந்தாலும், 'சாமி' என்ற சொல் நமக்கு சற்றும் பொருந்தாத சொல்லாக இருக்கு (இதை கேட்டாவது திருந்தின வாழ்க்கை வாழு அப்படின்னு சொல்றீங்களா ..ரைட்டு.)

இதில் இன்னொரு கொடுமையான விஷயம், ஒரு காரா சாராமணா விவாதத்தில், ஏதோ புள்ளி விவரம் கொடுத்து என்னுடைய கருத்தை சொல்ல முயன்று கொண்டு இருந்தேன். அதற்கு எதிர் கருத்து சொன்ன நாத்திக நண்பர் ஒருவர் "சாமி" என்ற பெயரில் யாரவது ஏதாவது சொன்னால் நாங்க நம்ப மாட்டோம்னு சொல்லி என்னுடைய வாயை அடைச்சிட்டார்.

சென்ற இடுகையில் பலருக்கும் தமிழில் எழுத வழிகாட்டியா இருக்கும் மூத்த பதிவர் கோவியார், ஒரு அளவு மேல சென்று "சாமியோவ்" அப்படின்னு எழுதிட்டார். இதுக்கும் மேல 'அன்பே சிவம்' மேடி (maddy) மாதிரி முழிச்சிட்டு இருப்பது சரியா இல்லை. அதனால போர்க்கால அடிப்படையில் பெயர் மாற்றம் பண்ண வேண்டி ஆகிவிட்டது.

சாமுவேல் | Samuel

.

3 comments:

Paleo God said...

இதுவும் நல்லாதான் இருக்கு சாமி வேல் - ன்னு.::)))

Samuel | சாமுவேல் said...

@பலா பட்டறை
முதல் வருகைக்கு நன்றி சார்.

//இதுவும் நல்லாதான் இருக்கு சாமி வேல் - ன்னு//

'சாமி' என்ற ஒற்றை வார்த்தை தான் கொஞ்சம் ஒட்டுதலா இல்லை, 'சாமி வேல்' நல்லா தான் இருக்கு. நன்றி.:-)

Paleo God said...

ஸ்போர்டிவா எடுத்துகிட்டீங்களே!:). நன்றி. வாழ்த்துக்கள் - Sammy=சாமுவேல்..:))