இந்த தேற்றத்தின்(Theorem) விளக்கம் கீழ்வருமாறு
அதாவதாக ஆகபட்டது என்னவென்றால், ஒரு குரங்கை ஒரு தட்டச்சுப்பொறி முன்பாக உட்கார வைத்து பொட்டியை தொடர்ந்து தட்ட செய்தால் கணிப்பு வரம்புகடந்த காலகட்டத்தில் அது "பெரும்பாலும் கண்டிப்பாக " ஷேக்ச்பியரின் ஹாம்லெட் (shakesphere's hamlet) புத்தகத்தை முழுவதுமாக அடித்து கொடுத்து விடுமாம்.
கவனிக்க ""பெரும்பாலும் கண்டிப்பாக" என்ற வார்த்தையை ...ஆங்கிலத்தில் இது "almost surely" அப்படி என்று வரும்.
பரிணாம உயிர் நூல் அறிஞர்கள் (evolutionary biologist) இந்த தேற்றத்தை வைத்து ..டார்வினின் natural selection மற்றும் origin of species விளக்க முயற்சிகிறார்கள்.. சுருக்கமா சொல்ல போனால்...எங்கயோ ஏதோ குரங்கோ, குரங்கு மாதிரி ஒரு ஜீவனமோ, அல்லது இந்த குரங்கின் செயலுக்கு ஏற்ற ஒரு செயலோ (அதாங்க பொட்டியை தட்டுற மாதிரி) காரணத்தினால் தான் மனிதன் உருவானான் அப்படி சொல்ல முயற்சிக்கிறது. வேறுவிதமாக சொன்னால், ஒரு மேஜை மீது 206 எலும்புகள் வைத்து..ஒரு குரங்கு கூட்டத்தை அந்த அறையில் விட்டால்....அந்த குரங்கு கூட்டத்தினால் உங்களையும் என்னையும் மாதிரி ஒரு மனிதனை உருவாக்க முடியும் போல இருக்கு... என்னாடா இவன் ..புரியாத நாலு வார்த்தையை எழுதி,லூசுத்தனமா அறிவியல் பத்தி எழுதறான் நினைக்கிறீங்களா. வேற என்னங்க பண்றது, கண்மூடி தனமா எதையும் நம்ப கூடாது அப்படின்னு "பகுத்தறிவாளர்கள்" பண்ணும் பிரசாரம் கேட்டா, இப்படி தான் யோசிக்க தோணுது. |