என்கணிதம் (numerology) படி ஆங்கிலத்தில் sivakasi என்ற பெயரை sivakaasi அப்படின்னு மாத்த சொல்லி, சிவகாசி நகராட்சிமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நகரமன்றத்தில் ஒன்பது தி.மு.க வினரும் இதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்கள். இது போன வாரம் வந்த செய்தி. சரி இதற்கு கலைஞர் ஒப்புதல் அளிப்பாரா ? கலைஞர் ஆதரவாளர்கள் சரியாக சொல்லுங்களேன் பார்க்கலாம். வெடிவிபத்து நிறைய நடைபெற்றால் அதற்கு ஏற்ற பாதுகாப்பு வசதி செய்யாம, பேர் மாற்றம் பன்னா சரியாயிடும் அப்படின்னு நினைக்கிற இவர்களை என்னனு சொல்றது.
------------------------------------------------------------------
ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் அதிபர் என்பது எல்லாருக்கும் தெரியும், இவருடைய பெயரை பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் எல்லா அனாதை பிள்ளைகளின் சட்ட ஆவணங்களில் (certificate) அப்பாவாக எழுத சொல்லி இருக்கார். சுருக்கமாக பாகிஸ்தானில் இருக்கும் எல்லா அனாதை பிள்ளைகளுக்கும் சர்தாரி தான் தந்தை அப்படின்னு சொல்லலாம். இதனால் அவர்களுக்கு என்ன பயன் அப்படின்னு ஆராய்ச்சி பன்ன வரலை. இது பாராட்ட வேண்டிய ஒரு செயல் அப்படின்னு நான் நினைக்கிறேன்.
------------------------------------------------------------------
விளையாட்டு துறையில், giant killer அப்படின்னு சொல்றவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க, இவிங்க நிறைய போட்டி ஜெயிக்க மாட்டாங்க, ஆனால் யாராவது ஜாம்பவான்களை மட்டும் எளிதா ஜெயிச்சுருவாங்க. டெல பொற்றோ(del potro), அப்படி தான் நினைக்கிறேன், இவர் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் back to back ஆட்டத்தில், நடால், பெடரர் ரெண்டு பேரையும் வீழ்த்திருகார்.
------------------------------------------------------------------
26/11 வீடியோ பார்க்கும் போது ரொம்பவே கஷ்டமா இருந்தது, முக்கியமாக டிச்கோவேரி சேனலில் ஒரு வீடியோ பார்க்கும் போது, வெளிநாட்டு காரர்கள், அதிகம் பாராட்டியது அந்த ஹோட்டல் பணியாளர்களை. ஒரு பணியாளர் தன் உயிர் கொடுத்தாவது, அவர்களை காப்பாத்துவேன் என்று தைரியம் சொல்லி பிறகு இறந்தும் உள்ளார். ஹோட்டல் நல்ல பரிச்சியம் ஆன இவர்கள் எளிதாக அவர்களுக்கு தெரிந்த வழியில் தப்பித்து இருக்க முடியும், இருந்தாலும் பலர் இவர்களை காப்பாற்ற உயிர் விட்டு உள்ளார்கள். இதை கேட்ட பிறகு இந்த துறை சார்ந்தவர்கள் மேல் அதிகம் மரியாதை வந்துள்ளது.
Tuesday, December 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
எல்லாமே நல்ல மேட்டர்பா
எழுத்துப்பிழைகள் இல்லாம அருமையா எழுதி இருக்கீங்க. செய்தி துணுக்குகளும் நல்லா இருந்தது.
ம்... அசத்துங்க சாம்,
@மணி, அது எண்கணிதம் இல்ல..??
பாகிஸ்தான் அதிபரின் செயல் பாராட்டத்தக்கது!
டெல் போட்ரோ ஒரு சிறந்த வீரர்.. அவர சாதரணமா எடை போடதீங்க... அவர்தான் அடுத்த முன்னணி வீரர்!
Post a Comment