Monday, December 7, 2009

இலக்கணவாதி..

தமிழ் இலக்கணம் எல்லாரும் படித்து இருப்பீர்கள், தினம் தினம் பதிவுகளில் நிறைய கேள்விகள் அதற்கு ஏற்ற பதிலும் பலரும் பகிர்ந்து கொண்டு வரோம். சரி இப்ப நாம அளிக்கிற பதில், தமிழ் இலக்கணத்தில் அதற்கு என்ன பேர் சொல்றாங்க, அப்படின்னு பார்க்கலாம்.

சுட்டு விடை.
அங்க போ, இங்க போ அப்படின்னு சுட்டி காட்டுறது தாங்க சுட்டு விடை, வலையுலகத்தில் சொந்த கருத்து சொல்லாம, சுட்டி கொடுக்கிறது குட சுட்டு விடை அப்படின்னு சொல்லலாம்.

மறைவிடை.
கேட்ட கேள்விக்கு எதிர்மறையா சொல்றது தாங்க மறை விடை...எடுத்து காட்டு, இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கா ? சுத்தமா பிடிக்கலை.

நேர் விடை.
ஒரு கேள்விக்கு உடன்பட்டு பதில் சொல்வது தாங்க நேர் விடை...எ.கா... நீ வலையுலகில் கட்டுரை காப்பி அடிச்சு பதிவு எழுதிருக்கியா ..? எழுதிருக்கேன்.

ஏவல் விடை.
நீ பதிவர் சந்திப்பு வருவியா அப்படின்னு கேட்டா ? நீங்க போயிட்டு வாங்க சார் அப்படின்னு கேள்வி கேட்டவனையே அதை செய்ய சொல்வது தாங்க ஏவல் விடை.

வினா எதிர் வினாதல் விடை.
நீங்க என் பதிவில் பின்னுட்டம் போட்டீங்களா அப்படின்னு கேட்டா ? முதல நீங்க என் பதிவில் பின்னுட்டம் போட்டீங்களானு எதிர் கேள்வி கேட்கறது தாங்க, வினா எதிர் வினாதல் விடை அப்படின்னு சொல்லுவாங்க.

உற்றது உரைத்தல் விடை.
நீங்க விஜய் படம் பார்த்தீங்களா ? அப்படின்னு கேட்டா, எனக்கு கழுத்தில் ப்ளட் வரும் என்று, இதற்கு முன்னாடி நடந்த சம்பவத்தை சொல்லுவது தாங்க, உற்றது உரைத்தல் விடை.

உறுவது கூறல் விடை.
சச்சின் விளையாட்டில் எப்ப ஒய்வு பெறுவார் ? அப்படின்னு கேட்டா. அவர் நிறைய ரெகார்ட் பண்றாரே அப்படின்னு, அதற்கு சம்பந்தமா நடக்க போறதை சொல்றது தாங்க உறுவது கூறல் விடை.

இனமொழி விடை
பதிவில் நல்ல கவிதை எழுத சொன்னா, அதற்கு பதிலா மொக்கை கதை எழுதுவது தாங்க இனமொழி விடை, (இங்கு கவிதைக்கு இனமானது கதை)

3 comments:

Samuel | சாமுவேல் said...

தமிழ்மணம் விருது பெற போகிறவருக்கு என்னுடைய முழு ஆதரவு இருப்பதால், இந்த பதிவை விருதுக்கு அனுப்பலைங்கோ. :)

மணிகண்டன் said...

விருதுக்கு அனுப்பிவிட்டு பாருங்க...நல்லா இருக்கு :)- ஆனா மீ த first நீங்களே போடறது சரியில்லை.

Unknown said...

ஒரு இனமொழி விடையில் பதிவு. பேஷ் பேஷ் ரொம்ப நல்ல மொக்கை!!!
அதான் விருதுகிருதுன்னு சொல்லிட்டு இப்புடி ஏன் பின் வாங்குறீங்க ???

அனுப்பியாச்சா?????