Tuesday, October 20, 2009

தேசத்திற்காக உயிர்கொடுப்போம்.

நமக்கு எப்போதுமே புது படம் பார்த்துட்டு வந்து, அதை பார்க்கிறதுக்கு பயங்கர ஆர்வமா இருக்கரவன்ட போய் படத்துல வர சஸ்பென்ஸ் எல்லாத்தையும் சொல்லி, அவிங்கள படம் பார்க்கும் போது வரும் ஆர்வத்தை குறைக்கிறது தாங்க வேலை.

சரிங்க இந்த தீபாவளி ரிலீஸ் ரொம்ப எதிர்பார்க்க பட்ட படம் ஆதவன் அதை பத்தி சுத்தமா எழுத விருப்பம் இல்லை, ஏன்னா படம் அந்த மாதிரி. முழுக்க முழுக்க சூர்யா கூடவே வடிவேலுவும் வரார், இது ஒரு ஆக்க்ஷன் படமா, சஸ்பென்ஸ் படமா, இல்லை காமெடி படமானு கடைசி வரைக்கும் புரியவே இல்லை. சூர்யா, பத்து வயசு சிறுவனா ஒரு அஞ்சு நிமிஷம் வருவார், அந்த காட்சி எடுத்தவனை ஒரு தடவை பாராடிட்டு, இதுக்கு மேல இந்த மாதிரி முயற்சி எல்லாம் பண்ண வேணாம்னு கை எடுத்து கும்பிடலாம்.

சரிங்க, 'ஆதவன்' பார்த்த பாதிப்போ என்னமோ தெரியலைங்க "பேராண்மை" படம் ஒரு அளவுக்கு நல்லாவே இருந்தது பார்க்க, தேசபற்றை மையமா வச்சும், மலை வாசிகளை வைத்தும் படம் எடுத்திருகார்கள். படம் பார்க்கும் போதே NSS மேல நிறைய மதிப்பு வருது, இந்த படத்தில் முதல் பாதி, நிறைய இடத்தில் கட், மலை ஆதிவாசிகளை பற்றி தப்பானா வசனங்கள் தான் காரணம் என்று நினைக்கிறேன். இந்த படத்தில் பாட்டு ஒன்னும் நல்லா இல்லைங்க, நிறைய பாட்டும் வந்த மாதிரி தெரியலை. ஐந்து அம்மணிகள் வராங்க, ஒரு இடத்தில் தேசத்துக்காக உயிர் கொடுப்போம்னு துப்பாக்கிய தூக்கி உறுதிமொழி எடுப்பாங்க, நல்ல காட்சிங்க அது.

12 comments:

பீர் | Peer said...

நம்ம உயிரையும் காப்பாத்தி தேசத்தையும் காப்பாத்துறது தான் அறிவுடைமை. சும்மா இப்படி எல்லாரும் உயிர் கொடுத்திட்டா அப்பறம் தேசம் மட்டும் இருந்து என்ன செய்ய... அவன் ஈஸியா வந்து தூக்கிட்டு போயிடுவான். :)

ஆமா.. இது காமெடி பதிவா இல்ல.. சீரியஸா...

Samuel | சாமுவேல் said...

நன்றி பீர் முகமத்.

//நம்ம உயிரையும் காப்பாத்தி தேசத்தையும் காப்பாத்துறது தான் அறிவுடைமை.//
சரியா சொன்னீங்க, அந்த வார்த்தை nss உறுதிமொழியில் வருது போல, இன்னும் நிறைய சொன்னைங்க, நியாபகம் இல்லை.

//ஆமா.. இது காமெடி பதிவா இல்ல.. சீரியஸா...//
எழுதும் பொது சீரியஸா எழுதினேன், படிச்சு பார்த்தா காமெடியா இருக்கு.

kanagu said...

peranmai padam naanum paakkanum thalaivaa..

/*இந்த படத்தில் முதல் பாதி, நிறைய இடத்தில் கட், மலை ஆதிவாசிகளை பற்றி தப்பானா வசனங்கள் தான் காரணம் என்று நினைக்கிறேன்.*/

censor board-ah ozhichitaale namma naatu padangal urupadum... irukuratha sonna makkaloda unarchikala thoondureenga apdimbaanunga...

heroine irukkuratha kaamicha 'U' certificate kodupaanunga... madayanunga..

மணிகண்டன் said...

ஜெகன்மோகினி பாக்கலையா ? இந்த பதிவுக்கு மகுடமா இருக்கும் அந்த படத்தோட விமர்சனம் :)-

Samuel | சாமுவேல் said...

நன்றி கனகு
// irukuratha sonna makkaloda unarchikala thoondureenga apdimbaanunga.....//

காவல்துறை அதிகாரி பேசுறது முழுக்க கட், உண்மையில் அப்படி தான் பேசுவாங்க போல இருக்கு.
ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் அப்படின்னு சொல்றவங்கள பத்தி எடுக்கும் பொது கொஞ்சம் கவனம் வேண்டும் கனகு.

Samuel | சாமுவேல் said...

நன்றி மணி
//ஜெகன்மோகினி பாக்கலையா ? இந்த பதிவுக்கு மகுடமா இருக்கும் அந்த படத்தோட விமர்சனம் :)-//
பாஸ் ....சாம் அன்டேர்சன் படம் பார்க்க வச்சது பத்தாதுன்னு, இப்ப ஜகன்மோகினின்னு எதோ ஒன்னு சொல்றீங்க..
அப்புறம் திருப்பவும் மன்னிப்பு அப்படின்னு ஒரு பதிவு எழுதி..உங்களை ..

Unknown said...

இனிமேல் தமிழ் படங்களை பாக்கறது இல்லனு முடிவு பண்ணிட்டேன்... இருந்தாலும் உங்களோட பதிவுல கால் வெச்துக்காக இந்த அடையாளம் !!!
நீங்க ஜெகன் மோகினி படம் பாத்திருக்கலாம், படம் பாக்க ஆர்வம் இல்லனாலும் உங்களோட விமர்சனம் படிக்க ரொம்ப ஆசை !!!

சின்ன சின்ன ஆசை.. ...

Samuel | சாமுவேல் said...

//இனிமேல் தமிழ் படங்களை பாக்கறது இல்லனு முடிவு பண்ணிட்டேன்//

நீங்க கடைசியா பார்த்த படம் 'கந்தசாமி' யாக தான் இருக்கும்னு நினைக்கிறேன்.

Unknown said...

சரியா சொன்னீங்க, முதல் நாள் திரைஅரங்கு போய் பாத்தேன், அதோட பாதிப்புதான் இப்புடி ஒரு முடிவு!!

kanagu said...

விருது வாங்க, வாங்க தலைவா..

http://enadhu-ularalgal.blogspot.com/2009/10/blog-post_15.html

Rajalakshmi Pakkirisamy said...

surya kaga support pannunga sir :)

Samuel | சாமுவேல் said...

நன்றி ராஜலக்ஷ்மி.

சூர்யாகாக சப்போர்ட்,...."அடியே கொல்லுதே" பாட்டு உங்களுக்கு பிடிக்கும் தானே ?. இந்த படமும் அப்படி தாங்க 'அடியே கொல்லுதே'