நான் இந்த பதிவுக்கு ஏன் இந்த பேர் வச்சேன் என்று யாராவது கேட்கலாம், அட அப்படி யாரும் கேட்கலைனாலும் நானே சொல்லுவேங்க.
வாரத்துக்கு ஒரு தடவையாவது நான் பெரும்பாலும் கொத்து பரோட்டா சாபிடுவது வழக்கம். அதே வழக்கத்தோடு வாரத்துக்கு ஒரு முறையாவது தமிழில் பதிவு எழுதுவேன் ஒரு நம்பிக்கை, அதாங்க இந்த பேர். எப்படிங்க லாஜிக் நல்லா இருக்கா ?.
சரி எதுக்கு மதுரை திருச்சின்னு ஊரு பேருலாம் லிங்க்ல வச்சிக்கிட்டு ? பிறந்தது திருச்சிங்க, ஆனால் வளர்ந்தது தமிழை சங்கம் வைத்து வளர்த்த ஊருங்க, ஆமாங்க மதுரை. மதுரைல கூடல்நகர் அப்படின்ற பகுதி, வைகை ஆற்றங்கரைலிருந்து ஒரு நான்கு அஞ்சு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதி. அட சொல்ல மறந்துட்டேன் பாருங்க, மதுரை கொத்து பரோட்டா க்கு ரொம்ப பிரபலம்.
சரி விஷயத்துக்கு வருவோம், நமக்கு பல துறைல பயங்கர ஆர்வ கோளாறு. அதனால பெரும்பாலும் இந்த பதிவு விளையாட்டு, அரசியல், சினிமா, மருத்துவம், வியாபாரம், என்னுடைய அனுபவம், இதை பற்றி இருக்கும்.
Sunday, October 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
புது வலைப்பூவிற்கு வாழ்த்துகள்..
எற்கனவே கேபிள் சங்கர் கொத்துபரோட்டா எழுதுகிறார். வேறு பெயர் வைப்பது குழப்பத்தைக் குறைக்கும்.
Post a Comment