Wednesday, October 7, 2009

இயற்கை

சந்திரனுக்கு ஒரு விண்கலம் அனுப்ச்ச நாம சும்மா போட்டோ எடுத்ததோடு நிக்காம, நிலவில் தண்ணி இருக்குன்னும் கண்டுபிடிச்சு உலகத்துக்கு சொன்னோம். எனக்கு என்னமோ இந்த தண்ணீர் கண்டுபிடிப்பில் இயற்கை அன்னை ரொம்பவே கோபம் ஆகிடாங்கனு நினைகிறேன்.

இது வரைக்கும் வறட்சி நிதி கேட்டுட்டு இருந்த மாநிலங்கள் இப்ப வெள்ளம் நிதி கேட்கும் அளவுக்கு மோசமாக இருக்கு. ஆந்திர, கர்நாடக மாநிலங்கள் ரொம்பவே கஷ்ட நிலைமையில் இருக்குங்க. உள்துறை அமைச்சர் அரசு நிதி குடுப்பதில் பற்றாக்குறையே இருக்காது அப்படின்னு சொல்றார், என்னுடைய பிராத்தினை இந்த நிதி உதவிகள் கஷ்டப்படற மக்களை சரியாக சென்றடயனும். வறட்சி சமயத்தில் மக்கள் அவுங்க தங்கறதுக்கு வீடும், அவுங்க உடமையும் இருந்தது. இப்ப வெள்ளத்துக்கு அப்புறம் வீடு, உடமை இழந்து நிறைய பேர் நிக்குறாங்க.

தேக்கடில நடந்த விபத்தை நினைத்தா இன்னும் கஷ்டமா இருக்குங்க, அந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் சுத்தமா நீச்சலே தெரியாத நாம, கேரளாவில் ஒரு சுற்றுலா தளத்தில், அதிக கூட்டமுடன் ஒரு படகில் நண்பர்களுடம் கேலியும் குத்துமாக சென்று வந்தேன். இனிமேலாவது படகு சவாரி பண்ணும் முன்பு 'உயிர் காப்பு அங்கி' மற்ற பாதுகாப்பு வசதி இருக்கானு பாத்திட்டு தான் சவாரி செல்லனுங்க

பசுபிக் பெருங்கடலில் இருக்கும் ஒரு தீவு தாங்க சமோவா தீவு, சென்ற வாரத்தில் சுனாமி இந்த தீவை தாக்கி இருக்கு , சுனாமி எச்சரிக்கை சரியான சமயத்தில் வந்ததாலும், கடல் உள்வாங்கியதை பார்த்தும் மக்கள் கொஞ்சம் உஷாராய் இருந்திருக்காங்க, இருந்தாலும் அடிச்ச சுனாமி சுமார் நுறு உயிருக்கும் மேல எடுத்துட்டு , அந்த தீவை ஒரு துவசம் பண்ணிட்டு போயிருச்சுங்க.

இன்னொரு இயற்கை அழிவும் நடந்துறுக்கு சென்ற வாரத்தில், இந்தோனேசியா நில நடுக்கம் ஆயிரகணக்கான மக்கள் புதைக்க பட்டு இறந்துடாங்க. ஒரு வாரத்தில் இவளவு சம்பவங்களா ? எனக்கு தான் இப்படி தெரியுதா இல்லை உலகத்தில் ரொம்ப சாதரணாம இந்த மாதிரி வார வாரம் நடந்துட்டு தான் இருக்கா ?

8 comments:

மணிகண்டன் said...

நல்லா எழுதறீங்க சாம். அடிக்கடி எழுதுங்க.
எழுத்துப்பிழை ரொம்பவே அதிகம். உண்மையிலயே ஸ்பெல்லிங் தெரியாதுன்னா பிரச்சனை இல்ல. தெரியும்ன்னா சரி செய்யுங்க.

Samuel | சாமுவேல் said...

மணி,
வருகைக்கு நன்றி, ரொம்ப கவனமா எழுதியும் இப்படி எழுத்து பிழை வந்திருக்கு, அடுத்த பதிவில் சரி செய்யப்படும்.

Unknown said...

இந்த கொடும பத்தாதுனு, இப்போ வேற ஒரு சுனாமி எச்சரிக்கை!! நல்லவேல அத ஒரு சின்ன அலைதான்னு சொல்லி எச்சரிக்கைய ரத்து பண்ணிடாங்க!!

Anonymous said...

Tamilil font ennudaya system il illadhadhaal Aangilathil comment adikka virumbugiraen.

Sam, thaangal ivvalavu alagaaga tamil adhuvum thooya tamil eludhuveergal endru ivvalavu naatkal engalukku theriyaamal poi vittadhae. Aeninum idhu oru nalla thodakkam.

Muthunathan

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் சாம்.. விஷயங்களை நல்லா தொகுத்திருக்கீங்க. மகிழ்ச்சி.

எனக்கும் எழுத்துப்பிழை (லகர, றகர) பெரிய பிரச்சனைதான். என்ன பண்ண.. எப்படியோ சமாளிச்சுக்கிட்டிருக்கேன். அதிகமா எழுதும் போதுதான் அதிலிருந்து பாடம் கிடைக்குது.

Samuel | சாமுவேல் said...

நன்றி பீர். தொடர்ந்து படிக்கவும்.

Samuel | சாமுவேல் said...

நன்றி ஜெகதீசா (தமிழில் இப்படி தானே எழுதனும் உங்கள் பெயரை) ....

டாய் முத்துநாதா...தமிழ்ல எழுதுறதுக்கு font வேணுமா என்ன, எந்த காலத்தில் இருக்கீங்க ? இந்த சுட்டியை பார்க்கவும்
http://www.google.com/transliterate/indic/TAMIL

பதிவு வருகைக்கு நன்றி.

Unknown said...

ஜெகதீஷ் எனது முழு பெயர், ஆனா பாருங்க இரண்டு எழுத்துகள் வடமொழியிலிருந்து!!! சுத்த தமிழ்ல எழுதனும்னா பெயர் உச்சரிப்பு சுத்தமா மாறிடும்!! (செகதீச்)