Monday, December 21, 2009

பா.ஜ.க கட்சி தலைமை, குஜராத் சட்டம்.

பா.ஜ.க கட்சி தலைமை மாறிட்டு வருது, எதிர் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக பொது தேர்தல் முடிவு வெளி வந்தவுடன் பேப்பர்( ராஜினாமா) போட்டவர், இப்ப தான் ரீலீவ் ஆகிருக்கார்.  நமக்கு(சிறுபான்மையினர் ) சுத்தமா பிடிக்காத தலைவருங்க இவர், அதனால வெறும் நெகடிவ் தகவல் தாங்க.நல்ல விஷயம் தெரிந்தால் பின்னுட்டமாக எழுதுங்கள். வரவேற்கப்படும்.

கண்டகார், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு, அதில் பிணை கைதியானவர்களை, விடுவிக்க 3 தீவிரவாதிகளை விடுவிக்க பட்டார்கள். இந்த பிணை கைதிகள் மாற்றுதல் நடக்கும் பொது உள்துறை அமைச்சராக இருந்தவர்.
 
சரி, பயணிகள் உயிருக்காக செய்த ஒரு emotional முடிவு அப்படின்னு வச்சுகிட்டாலும், இவர் எழுதிய புத்தகத்தில் இந்த சம்பவம் பத்தி எழுதியது இவருடைய முழு அரசியல் நேர்மையும் கேள்வி குறியாக ஆக்கி விட்டது.அதாவது இந்த தீவரவாதிகள் விடுதலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை அப்படின்ற மாதிரி எழுதவும், நேர்காணல் கொடுக்கவும் செய்தார். இவர் ஏன் இப்படி செய்தார்?  பொது தேர்தல் சமயத்தில் மன்மோகன் சிங்'கை  இவர்கள் தாக்கிய ஒரே விஷயம் வீக் பிரதமர், அதனால் தன்னை பலசாலியாக காமிக்க தன்னுடைய பழைய காலத்து செயல்களை, தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றார்.
 
பாப்ரி மஸ்ஜித் சம்பவத்துக்கு இவர் நடத்திய ரத யாத்திரா, சங்க பரிவார்களை துண்டி விட்ட பெருமையும் இவரை தான் சேரும்.

ஜின்னாவை புகழ் பாடி தன்னுடைய பதவியை இழந்தவர். மன்னிக்கவும் RSS இனால் பதவி இறக்கம் செய்யப்பட்டவர்.

குஜராத் படுகொலை சம்பவத்தின் போதும் உள்துறை அமைச்சராகவும், துணை பிரதமராகவும் இருந்தவர்.

ராஜ்நாத் சிங்கின் பதவி காலமும் முடிஞ்சிருச்சு, இப்ப புதுசா வந்திருக்கும் கட்சி தலைவர் யாருங்க....நிதின் கட்கரி 'வாம், RSS தெளிவா சொல்லிடைங்க, இந்த அருண் ஜெயிட்லி, சுஷ்மா ஸ்வராஜ், இவிங்களுக்கலாம் பதவி கிடையாதுன்னு,இப்போதைய பதவி 3 வருஷம் தான் செல்லும், அடுத்த 3 வருஷம் தான் முக்கியம், ஏன்ன அப்ப தான் பொது தேர்தல் வரும். நரேந்திர மோடி அதற்காக தன்னை தயார் படித்திட்டு வரார். தலைவர் குஜராத்ல புரட்சி பண்ணிட்டு இருக்கார், கட்டாயமா ஒட்டு போடுனுமால, அந்த ஊருல சட்டம் போட்டுட்டார். middle,upper வகுப்பில் இவருக்கு இருக்கும் ஆதரவை ஓட்டாக மாற்ற தான் இந்த சட்டம் என்று சொல்லிகிறார்கள்.

Monday, December 7, 2009

இலக்கணவாதி..

தமிழ் இலக்கணம் எல்லாரும் படித்து இருப்பீர்கள், தினம் தினம் பதிவுகளில் நிறைய கேள்விகள் அதற்கு ஏற்ற பதிலும் பலரும் பகிர்ந்து கொண்டு வரோம். சரி இப்ப நாம அளிக்கிற பதில், தமிழ் இலக்கணத்தில் அதற்கு என்ன பேர் சொல்றாங்க, அப்படின்னு பார்க்கலாம்.

சுட்டு விடை.
அங்க போ, இங்க போ அப்படின்னு சுட்டி காட்டுறது தாங்க சுட்டு விடை, வலையுலகத்தில் சொந்த கருத்து சொல்லாம, சுட்டி கொடுக்கிறது குட சுட்டு விடை அப்படின்னு சொல்லலாம்.

மறைவிடை.
கேட்ட கேள்விக்கு எதிர்மறையா சொல்றது தாங்க மறை விடை...எடுத்து காட்டு, இந்த பதிவு உங்களுக்கு பிடிச்சிருக்கா ? சுத்தமா பிடிக்கலை.

நேர் விடை.
ஒரு கேள்விக்கு உடன்பட்டு பதில் சொல்வது தாங்க நேர் விடை...எ.கா... நீ வலையுலகில் கட்டுரை காப்பி அடிச்சு பதிவு எழுதிருக்கியா ..? எழுதிருக்கேன்.

ஏவல் விடை.
நீ பதிவர் சந்திப்பு வருவியா அப்படின்னு கேட்டா ? நீங்க போயிட்டு வாங்க சார் அப்படின்னு கேள்வி கேட்டவனையே அதை செய்ய சொல்வது தாங்க ஏவல் விடை.

வினா எதிர் வினாதல் விடை.
நீங்க என் பதிவில் பின்னுட்டம் போட்டீங்களா அப்படின்னு கேட்டா ? முதல நீங்க என் பதிவில் பின்னுட்டம் போட்டீங்களானு எதிர் கேள்வி கேட்கறது தாங்க, வினா எதிர் வினாதல் விடை அப்படின்னு சொல்லுவாங்க.

உற்றது உரைத்தல் விடை.
நீங்க விஜய் படம் பார்த்தீங்களா ? அப்படின்னு கேட்டா, எனக்கு கழுத்தில் ப்ளட் வரும் என்று, இதற்கு முன்னாடி நடந்த சம்பவத்தை சொல்லுவது தாங்க, உற்றது உரைத்தல் விடை.

உறுவது கூறல் விடை.
சச்சின் விளையாட்டில் எப்ப ஒய்வு பெறுவார் ? அப்படின்னு கேட்டா. அவர் நிறைய ரெகார்ட் பண்றாரே அப்படின்னு, அதற்கு சம்பந்தமா நடக்க போறதை சொல்றது தாங்க உறுவது கூறல் விடை.

இனமொழி விடை
பதிவில் நல்ல கவிதை எழுத சொன்னா, அதற்கு பதிலா மொக்கை கதை எழுதுவது தாங்க இனமொழி விடை, (இங்கு கவிதைக்கு இனமானது கதை)

Tuesday, December 1, 2009

டம்மாரம் டனபாலு.

என்கணிதம் (numerology) படி ஆங்கிலத்தில் sivakasi என்ற பெயரை sivakaasi அப்படின்னு மாத்த சொல்லி, சிவகாசி நகராட்சிமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த நகரமன்றத்தில் ஒன்பது தி.மு.க வினரும் இதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்கள். இது போன வாரம் வந்த செய்தி. சரி இதற்கு கலைஞர் ஒப்புதல் அளிப்பாரா ? கலைஞர் ஆதரவாளர்கள் சரியாக சொல்லுங்களேன் பார்க்கலாம். வெடிவிபத்து நிறைய நடைபெற்றால் அதற்கு ஏற்ற பாதுகாப்பு வசதி செய்யாம, பேர் மாற்றம் பன்னா சரியாயிடும் அப்படின்னு நினைக்கிற இவர்களை என்னனு சொல்றது.

------------------------------------------------------------------

ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் அதிபர் என்பது எல்லாருக்கும் தெரியும், இவருடைய பெயரை பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் எல்லா அனாதை பிள்ளைகளின் சட்ட ஆவணங்களில் (certificate) அப்பாவாக எழுத சொல்லி இருக்கார். சுருக்கமாக பாகிஸ்தானில் இருக்கும் எல்லா அனாதை பிள்ளைகளுக்கும் சர்தாரி தான் தந்தை அப்படின்னு சொல்லலாம். இதனால் அவர்களுக்கு என்ன பயன் அப்படின்னு ஆராய்ச்சி பன்ன வரலை. இது பாராட்ட வேண்டிய ஒரு செயல் அப்படின்னு நான் நினைக்கிறேன்.

------------------------------------------------------------------

விளையாட்டு துறையில், giant killer அப்படின்னு சொல்றவங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க, இவிங்க நிறைய போட்டி ஜெயிக்க மாட்டாங்க, ஆனால் யாராவது ஜாம்பவான்களை மட்டும் எளிதா ஜெயிச்சுருவாங்க. டெல பொற்றோ(del potro), அப்படி தான் நினைக்கிறேன், இவர் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் back to back ஆட்டத்தில், நடால், பெடரர் ரெண்டு பேரையும் வீழ்த்திருகார்.

------------------------------------------------------------------

26/11 வீடியோ பார்க்கும் போது ரொம்பவே கஷ்டமா இருந்தது, முக்கியமாக டிச்கோவேரி சேனலில் ஒரு வீடியோ பார்க்கும் போது, வெளிநாட்டு காரர்கள், அதிகம் பாராட்டியது அந்த ஹோட்டல் பணியாளர்களை. ஒரு பணியாளர் தன் உயிர் கொடுத்தாவது, அவர்களை காப்பாத்துவேன் என்று தைரியம் சொல்லி பிறகு இறந்தும் உள்ளார். ஹோட்டல் நல்ல பரிச்சியம் ஆன இவர்கள் எளிதாக அவர்களுக்கு தெரிந்த வழியில் தப்பித்து இருக்க முடியும், இருந்தாலும் பலர் இவர்களை காப்பாற்ற உயிர் விட்டு உள்ளார்கள். இதை கேட்ட பிறகு இந்த துறை சார்ந்தவர்கள் மேல் அதிகம் மரியாதை வந்துள்ளது.