மழை எவ்வளவு அடிச்சாலும் நாங்கலாம் வீட்ல உட்கார மாட்டோம்ணு சென்னை, கோவை, பொள்ளாச்சி பக்கம் கிளம்பினேங்க, ரயில் நிலையத்தில் நின்னா, நம்ம மக்கள்ஸ் தொலைபேசில அழைத்து சச்சின் ரெகார்ட் உடைக்க போறார் அப்படி இப்படின்னு பில்டப். இதுக்கு மேல என்னத்த சொல்ல ரயில் விட்டாலும் பரவா இல்லைன்னு, ரயில் நிலையத்தில் இருந்து வெளிய வந்து ஒரு நல்ல ஹோட்டல் கஷ்டபட்டு தேடி, உள்ள போனா, நாம போன நேரம் சச்சின் வெளிய போயிட்டு இருந்தார்.
சென்னை வந்து கொஞ்சம் வீடு வேலைகள் முடிக்கிற வரைக்கும் வானிலை மந்தமாக தான் இருந்தது, சென்னைல இருக்குற நம்ம பயலுங்க ஏதோ கல்லுரி பங்க் அடிக்கிற மாதிரி, ஆபீஸ் பங்க் பண்ணிட்டு வந்துடாய்ங்க, நாம மேல அவ்வளவு பாசம் பயலுங்களுக்கு(உண்மையில் சச்சின் ஆட்டம் இழந்த சோகத்தில் அடிச்ச தண்ணி, காலைல தெளியல அவிங்களுக்கு). சரி ப்ளூபெர்ரி அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்கு, சங்கம் திரைஅரங்கு பக்கத்தில் அங்க போய் நல்ல கட்டு கட்டிட்டு, கண்டேன் காதலை(சூப்பர் படம்) அப்படின்னு ஒரு படம் போனோம்.
படம் முடிஞ்சு வெளிய வந்தா பேய் மழை, அப்படியே கோயம்பேடு கிளம்பி போய், பொள்ளாச்சி ABT பஸ் ரொம்ப தாமதமா தான் வந்தது, என்னத்த பண்றது போங்க, காலைல பொள்ளாச்சி காந்தி சிலை முன்னாடி இருக்குற ஒரு ஹோடேலில் போய் சேர்ந்தோம், நல்ல ஊருங்க இது, ரெண்டாவது முறையா இங்க வரேன்.
என்னத்த பண்றது வால்பாறை, ஆழியார் அணை, மங்கி பால்ஸ், டாப் ஸ்லிப், பரம்பிகுளம் காடு, இப்படி பல பிளான் இருந்தாலும், ஹோட்டல், பஸ் டிக்கெட் இதெல்லாம் புக் பண்ணவன் கல்யாணமும் போனும்ல, அதனால கொஞ்சம் யோசிச்சு பார்த்து கிளம்புனா, சென்னைல எங்களை துரத்துன மழை, இங்கயும் விடலை, நாங்க பரவா இல்லை சரியா சில இடங்கள் பார்த்துட்டு விஷேசத்துக்கு வந்துடோம், இன்னொரு கும்பல் ரொம்ப கஷ்டப்பட்டு நிகழ்ச்சிக்கு வரமுடியாமல் போய் எங்களையும் கவலை படித்துடாங்க.
ஞாயிற்று கிழமை, மழை பயத்துல எங்கயும் போல(சுத்தமா மழை பெய்யல, என்னத்த பண்றது), நான் மட்டும் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் ஒரு திருசபைக்கு(சர்ச்) போய் வந்தேன். அப்புறம் மதியம் "எந்த ஊரு போனாலும் அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும்னு" 'காக்க காக்க' வில்லன் மாதிரி அப்படியே சுத்தி ரவுசு பண்ணிட்டு இருந்தோம். அப்பாலிக்க சாந்திரம், கோவை கிழம்பி வந்தா, என்னத்த சொல்ல, அன்னிக்கு முழுவதும் எங்களை விட்டு வைத்த மழை, கோவையில் எங்களுக்காக வெயிட் பன்னிருக்கு. அப்புறம் கோவையிலிருந்து ஒன்னும் பிரச்சினை இல்லாம வீடு வந்து சேர்ந்தேன்.
எங்க ஊரு வைகை ஆற்றில் தண்ணி ஓடுதாம், பார்க்க ஆசையா தான் இருக்கு, என்னத்த பண்றது, மறுபடியும் கிறிஸ்துமஸ் அப்ப போறதா தான் ப்ளான்.
Wednesday, November 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
nalla payanam than ponga... mazha kaalathula ennanga planning...
naama enna pannalum mazha konjam manasu vaikanum :)
உங்களால தான் சச்சின் அவுட் ஆயிட்டாரா!!! உன்ன யாருயா அத பாக்க சொன்னது!
//எந்த ஊரு போனாலும் அந்த ஊற ஒரு கலக்கு கலக்கணும்னு" 'காக்க காக்க' வில்லன் மாதிரி அப்படியே சுத்தி ரவுசு பண்ணிட்டு இருந்தோம்//
young blood appadithan irukkum sammy
:-))).
நன்றி கனகு, ஜக்கு
நன்றி தேனம்மை சரியா சொன்னீங்க.
//கிறிஸ்துமஸ் அப்ப போறதா தான் ப்ளான். //
பாப்போம் ...
Post a Comment