1.அரசியல் தலைவர்
பிடித்தவர் :சிதம்பரம் - ஒரு தமிழரான இவர் என்னிக்காவது பிரதமர் ஆவார்னு ஒரு நப்பாசையும் இருக்கு.
பிடிக்காதவர்: வை.கோ - "தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும் !!! "
2.எழுத்தாளர்
பிடித்தவர் : கருணாநிதி - இவருடைய எழுத்துக்கள் (மட்டும்) உணர்ச்சிபூர்வமாக இருக்கும்.
பிடிக்காதவர் : துக்ளக் சோ - ஒண்ணுமே புரியாது இவருடைய பத்திரிகை, வீட்டில் அப்பா வாங்கி வச்சு வெறுப்பு ஏத்துவார்.
3.இயக்குனர்
பிடித்தவர் : மணிரத்னம் - இவர் படத்தில் நிறைய அரசியல் இருக்கும்.
பிடிக்காதவர்: சீமான் - இவர் படத்திற்கு வெளியே நிறைய அரசியல் பண்ணுவார்.
4.நடிகர்
பிடித்தவர் : சூர்யா - இவர் படம் திரையருங்கு போனா, உங்களை சுற்றி பிகர்ஸ் அமர்வது உறுதி. ...ஹீ.. ஹீ....சும்மாங்காட்டி சொன்னேன். உண்மையில் நல்ல நடிகர்.
பிடிக்காதவர் : விஜய் - இவரை சிலர் ரஜினி இணையாக பேசுகிறார்கள், அந்த காரணத்துக்காக... என்னிக்கும் தலைவர் ஒருவர் தானே ?
5 . இசையமைப்பாளர்
பிடித்தவர் : ஹாரிஸ் ஜெயராஜ்...நிறைய கிட்டார் ஒழி இருக்கும் (அமெரிக்காவில் இவர் அலுவலகம் வைக்காததும் ஒரு காரணம்)
பிடிக்காதவர் : தேவா ..இவரை சாப்ட்வேர் பசங்களுக்கு இணையா ஒருவர் எழுதிட்டார்..காப்பி பேஸ்ட் பண்ணி, எங்க மானத்தையும் வாங்குகிறார்.
6. விளையாட்டு வீரர்
பிடித்தவர் : முரளி விஜய், இவர் முதல் ஆட்டத்தில் முக்கியமான சமயத்தில் பன்ன ரன் அவுட் பாருங்க, உங்களுக்கும் பிடிக்கலாம்.
பிடிக்காதவர் : வி.ஆனந்த், இந்தியாவை விட ஸ்பெயின் இவருக்கு பிடித்திருக்கு, இவர் ஸ்பெயின் குடி பெயர்ந்து ரொம்ப வருஷங்கள் ஆயிடிச்சு.
7. பதிவர்
பிடித்தவர் : நிறைய பேர் இருக்காங்க. குறிப்பா மணி, பீர்
பிடிக்காதவர் : கோவி... எனக்கு பிடித்த எல்லாரையும் இவர் ரொம்பவே திட்டுவாருங்க....கிர்ர்ர்.
(குறிப்பு ... மணி,பீர், கோவி கவனிக்கவும், உங்களுக்காக முதல் விதிமுறை மீறி இருக்கேன்.விதிமுறை ஒன்றை படிக்கவும்)
இந்த தொடர் பதிவுக்கு நான் அழைக்க விரும்புவது
ஜெகதீஷ்
பிரபா
கனகு
தங்கராஜ்
விதிமுறை..
1 . பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்.
2. அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.
3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் (தற்போதைய) இருக்க வேண்டும்.
4. காரணம் தேவையில்லை, விருப்பம் உள்ளவர்கள் சொல்லலாம்.
என்னை இந்த தொடருக்கு அழைத்த பீர் முகமத் அவர்களுக்கு நன்றி.
Thursday, November 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
வைகோவை உங்களுக்கு பிடிக்காது எனென்றால் அவர் "தமிழ்நாட்டில் ரத்த ஆறு ஓடும்! என வன்முறையாய் பேசியதால் சரி.
ஆனால் சிதம்பரம் என்ன காந்தியவாதியா?
அவரைப்போல கொலைகாரன் எங்கள் நாட்டின் பிரதமர் அருமை...!
ஈழத்தில ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுக்கு அவர் ஒரு காரணம்.....
அந்த ரத்த வெறிபிடித்த மிருகத்தை உங்களுக்கு பிடிக்குமா???
ஒவ்வொரு தடவையும் குண்டுபோட்டு கொல்லும் போது.. அவர் எதுவுமே தெரியாதது போல நடித்தாரே
அதற்காகவா அவரை உங்களுக்கு பிடிக்கும்???
என்னத்த சொல்ல.. ரொம்ப நன்றி!!
Shali
நான் ஜனநாயகத்தை மதிப்பவன், நடந்த கொடுமைகள் ஆதரிப்பவன் அல்ல.
அது ஒரு நப்பாசைங்க , நடக்காது கவலை வேண்டாம்.
//பிடித்தவர் : நிறைய பேர் இருக்காங்க. குறிப்பா மணி, பீர்
பிடிக்காதவர் : கோவி... எனக்கு பிடித்த எல்லாரையும் இவர் ரொம்பவே திட்டுவாருங்க....கிர்ர்ர்.
(குறிப்பு ... மணி,பீர், கோவி கவனிக்கவும், உங்களுக்காக முதல் விதிமுறை மீறி இருக்கேன்.விதிமுறை ஒன்றை படிக்கவும்)//
//விதிமுறை..
1 . பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும்.//
இந்த பதிவில் 'கோவி' தமிழ்நாட்டில் இல்லை
:)
பாதி தப்பு.. மார்க் போட முடியாது :)
குறிப்பா கடைசி.
கோவியார் தான் நான் எழுதவரக் காரணம். (அதுக்காத்தான திட்டுறீங்களா?)
======
பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் தமிழர்களாக இருக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும். நான் அதையே பின்பற்றி எழுதினேன்.
சாம்,
உங்கள் பதிவை தமிழிஷ், தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் ஏன் இணைக்கவில்லை?
***
பிடிக்காதவர் : வி.ஆனந்த், இந்தியாவை விட ஸ்பெயின் இவருக்கு பிடித்திருக்கு, இவர் ஸ்பெயின் குடி பெயர்ந்து ரொம்ப வருஷங்கள் ஆயிடிச்சு.
***
ஒருத்தர் என்னன்னா விளையாட்டு வீரர் போட்டிருக்கும் டிரஸ் பிடிக்கல - அதுனால பிடிக்கலையாம். உங்களுக்கு இப்படி ஒரு கோவமா ?
உங்களை எல்லாம் என்ன பண்ண ?
நன்றி கோவி....உங்களிடம் சண்டை போட்டு போட்டு, அடி வாங்கி வாங்கி தான், நமக்கும் பதிவில் ஒரு ஆர்வம் வந்தது. இப்பெல்லாம் சண்டை போடுறதுக்காக அதிகமாவே அரசியல் செய்தியும் படித்து வரேன். தாங்கள் அறிமுகம் மணி பதிவின் மூலம்(ராகுல் காந்தியை கிண்டல் பண்ணிய ஒரு பதிவு...கிர்ர்ர்ர்ர்).
நன்றி 'பீர்'பால்..... உங்களை அறிமுகபடித்தியதும் மணியின் ஒரு பதிவு தான். ரத்த பூமியா இருக்குற தமிழ் பதிவுலகில், டிப்ளமாடிக் பதிவர் நீங்கள்.
நன்றி மணி... கேள்வி கேட்கறது ரொம்ப ஈசி :). நீங்க எழுதி பாருங்கோ.எவனை பிடிக்கிறது எவனை பிடிக்காதுன்னு தமிழ்நாட்டில் சொல்றது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.
முக்கியமா உங்களுடைய பிடித்த/பிடிக்காத விளையாட்டு வீரர் பார்க்க ஆர்வம்.
thala thodarpathivukku azhaithatharku nandri..
aanal enakku itharkku thaguthi irukkuthaanu theriyala... irundhaalum muyarchi panren... seekram ezhuthuren :)
Ungaloda personal choice la enaku sila undanpaadukal illa... mukkiyama Chidambaram apram Seeman...
நன்றி கனகு,
சீக்கிரம் எழுதனும், உங்கள் அழைப்பு ஏற்கனவே தாமதமாக போயிட்டு இருக்கு.
இந்திய பிரதமர், காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் இந்த மூன்றை சார்ந்த ஒருவராக இருந்தால் மட்டுமே நிலையான ஆட்சியாக இருக்கும் என்பது எனது கருத்து. இதில் ஒரு தமிழர் என்றால் எனக்கு இவர் தான் அதிகம் பிடிக்கும்.
சீமான் ஏன் இது வரை ஈழ தமிழர் பற்றின ஒரு படம் எடுக்க முன் வரவில்லை என்பது அவர் மேல் பிடிக்காத விஷயம். காலங்கள் என்னுடைய இந்த கருத்தை மாற்றலாம்.
:))
/உங்களை சுற்றி பிகர்ஸ் அமர்வது உறுதி. ...ஹீ.. ஹீ..../
அவுகளா நீங்க. பதில்கள் சூப்பரப்பூ..
Post a Comment