Friday, April 2, 2010

குரங்கு, தட்டச்சு, பரிணாமம்

ஆங்கிலத்தில் "Infinite Monkey Theorem" பற்றி நான் படித்த சில விஷயங்கள் தான் இந்த பதிவின் நோக்கம், மற்றும் பரிணாம கோட்பாட்டில் எனக்கு இருக்கும் சில சந்தேகேங்களும் இந்த பதிவை தொடர்ந்து மற்ற பதிவுகளில் எழுத முயற்சிக்கிறேன்.


 இந்த தேற்றத்தின்(Theorem) விளக்கம் கீழ்வருமாறு

அதாவதாக ஆகபட்டது என்னவென்றால், ஒரு குரங்கை ஒரு தட்டச்சுப்பொறி முன்பாக உட்கார வைத்து பொட்டியை தொடர்ந்து தட்ட செய்தால் கணிப்பு வரம்புகடந்த காலகட்டத்தில் அது "பெரும்பாலும் கண்டிப்பாக " ஷேக்ச்பியரின்  ஹாம்லெட்  (shakesphere's hamlet) புத்தகத்தை முழுவதுமாக அடித்து கொடுத்து விடுமாம்.

கவனிக்க ""பெரும்பாலும் கண்டிப்பாக"  என்ற வார்த்தையை ...ஆங்கிலத்தில் இது "almost surely"  அப்படி என்று வரும்.
பரிணாம உயிர் நூல் அறிஞர்கள் (evolutionary biologist) இந்த தேற்றத்தை வைத்து ..டார்வினின்  natural selection மற்றும் origin of species விளக்க முயற்சிகிறார்கள்..

சுருக்கமா சொல்ல போனால்...எங்கயோ ஏதோ குரங்கோ, குரங்கு மாதிரி ஒரு ஜீவனமோ, அல்லது இந்த குரங்கின் செயலுக்கு ஏற்ற ஒரு செயலோ (அதாங்க பொட்டியை தட்டுற மாதிரி)  காரணத்தினால் தான் மனிதன் உருவானான் அப்படி சொல்ல முயற்சிக்கிறது. வேறுவிதமாக சொன்னால், ஒரு மேஜை மீது  206 எலும்புகள் வைத்து..ஒரு குரங்கு கூட்டத்தை அந்த அறையில் விட்டால்....அந்த குரங்கு கூட்டத்தினால் உங்களையும் என்னையும் மாதிரி ஒரு மனிதனை உருவாக்க முடியும் போல இருக்கு...

என்னாடா இவன் ..புரியாத நாலு வார்த்தையை எழுதி,லூசுத்தனமா அறிவியல் பத்தி எழுதறான் நினைக்கிறீங்களா. வேற என்னங்க பண்றது,  கண்மூடி தனமா எதையும் நம்ப கூடாது அப்படின்னு "பகுத்தறிவாளர்கள்" பண்ணும் பிரசாரம் கேட்டா, இப்படி தான் யோசிக்க தோணுது.


எனக்கு இப்ப தற்போதைய ஆச்சரியமே...கடவுள் இருக்காரா ?...அவரை கண்ணுல காமிங்க ?  கடவுளை யாரு படைச்சா ? அப்படி இப்படி ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்க்கும்...கடவுள் மறுப்பு குழுமினர்கள், இந்த குரங்கு தேற்றம்..போன்ற பல " ஐயநிலையான காரணங்களை" (hypothetical explanation) புத்தகத்தில் படித்து, அப்படியே பரிணாமம், பிக்-பாங்,மனிதன் தோற்றம்..இவைகளை நேரில் பார்த்த மாதிரி பதிவுலகில் எழுதி கொண்டு இருக்கிறார்கள்....அவர்களுக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவது, கடவுள் நம்பிக்கை என்பது மனிதனின் சக்திக்கு அப்பார்பாட்ட ஒரு ஒப்புயர்வற்ற சக்தி என்பதாக  பலருக்கு இருக்கலாம்....நம்பிக்கை தான். ஆனால் உங்களுக்கு இந்த மாதிரி ஐயநிலையான காரணங்களை நம்பும்  "நம்பிக்கை"   இருக்கே...அதை பார்த்து மத நம்பிக்கையாளர்கள் பொறாமை பட வேண்டும்..அந்த "நம்பிக்கையை" இங்கு பாராட்டி ஆக வேண்டும


7 comments:

Robin said...

Super!

செந்தில் நாதன் said...

புரியுற மாதிரி சொன்னா குமிருவாங்கன்னு பயமோ. :-)

சாமுவேல் | Samuel said...

//புரியுற மாதிரி சொன்னா குமிருவாங்கன்னு பயமோ//

நிச்சயமா இல்லைங்க....ஆயிரத்தெட்டு கேள்விகள் (குமிருவது) எனக்கும் இருக்கு...

kanagu said...

நீங்க என்ன சொன்னாலும் கடவுள் இருக்கார் அப்டினு சொல்றவங்கள விட, டார்வின் சொன்னது ஏத்துக்க முடியிற மாதிரி இருக்கு அப்டிங்குறது என்னோட கருத்து....

வால்பையன் said...

http://prabanjapriyan.blogspot.com/2010/04/blog-post.html


வீடீயோக்களை பாருங்க!

தருமி said...

ராபின் சொன்னதுபோல் இக்கட்டுரை ...
.... Super!!

ஆனால்Super-க்குப் பிறகு ஓரிரண்டு ஆச்சரியக்குறி கட்டாயத் தேவை.

smart said...

அருமை